Pages
▼
Saturday, December 14, 2019
TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 13122019
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 13/12
/2019 அன்று மாலை 6:00 மணி முதல் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் மற்றும் நடக்கவுள்ள மாவட்ட கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட துணைச்செயலாளர் ஆக சகோ சித்தீக் 9150612119
அவர்களையும், மாவட்ட வர்த்தகரணி செயலாளராக ஜாஹிர் 9043493168
அவர்களையும், மாவட்ட தொண்டரணி செயலாளராக ஜெய்லானி (பல்லடம்) 9003720137
அவர்களையும் தேர்வு செய்து மாநில நிர்வாகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெறுவது என்றும்
முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
அனுப்பர்பாளையம் கிளை பொதுக்குழு 13/12/2019
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை பொதுக்குழு 13/12/2019 அன்று காலை கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ஹனீபா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கீழ்கண்ட புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
தலைவர்: முஹம்மது அலி
8610967780
செயலாளர்: காஜா
9943527247
பொருளாளர்: சர்புதீன்
9843720636
துணைத்தலைவர்: ஜாபிர்
9790616737
துணைச்செயலாளர்: சலீம்
9344050590
மருத்துவணி: நூர்தீன்
8122574707
மாணவரணி: இம்ரான்
9360885181
தொண்டரணி: ஹக்கீம்
9626451651
தாவாப் பணிகளை வீரியமாக செய்யவும், நிர்வாகபணிகளை திறம்பட செயல்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி நிறைவுபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, December 10, 2019
திருப்பூர் மாவட்ட பொதுக்குழு 08122019
8/12/2019 அன்று காலை இனிதே ஆரம்பமாகி ...
உளத்தூய்மையுடன் நமது செயல்பாடுகளை தொடர்வோம் என்று மாநில செயலாளர் T.A. அப்பாஸ் அவர்களின் அறிவுறுத்தலுடன்
ஆண்டறிக்கை மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத் அவர்களும், வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்களும் தாக்கல் செய்தனர்.
மாணவரணி செயலாளர் இம்ரான் அவர்கள் மாணவரணி மூலம் எவ்வாறெல்லாம் சமூக சேவைகளை செய்வது என்றும்,
பேச்சாளர்கள் எவ்வாறெல்லாம் தாவா பணிகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதையும்,
மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீத் அவர்கள் மருத்துவணி சேவைகளை செய்வதின் பலன்களும் , ஒழுங்குமுறைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.
மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்தீக் அவர்கள் தொண்டரணி அமைத்து சேவைகளை செய்ய ஆர்வமூட்டினார்கள்.
மாநில பொதுச்செயலாளர் E.முஹம்மது அவர்கள் *நமது இலக்கு* எனும் தலைப்பில் வருங்கால தாவா சமூக சேவைப்பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டினார்கள்.
மருத்துவணி செயலாளராக S V காலனி அப்பாஸ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
கிளைகளின் தாவா சேவைப்பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த வருடம் சிறந்த முறையில் பணி செய்த கிளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட சகோதரர்கள் உற்சாகமாக வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தும் உறுதியோடு ஆண்டுப் பொதுக்குழு நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்











































