இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான CAA, NRC, NPR போன்ற சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி மதங்கள், கட்சிகள், இயக்கங்கள் கடந்து அனைத்து தரப்பு மக்களும் நாள்தோறும் அறவழியில் போராடி வருகிறார்கள்.
அந்த வரிசையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் 14/02/2020 அன்று தன்னெழுச்சியாக குழுமிய பொது மக்களின் போராட்டத்தை தடுக்கும் நோக்கில் மோடியின் ஏவல்துறையாக மாறிப் போன தமிழக அரசின் சில மோசமான காவல்துறை அதிகாரிகளின் உத்தரவால்....
அநியாயமாக தடியடி நடத்திய காவல் அதிகாரிகளை பதவி நீக்கி தண்டிக்க வலியுறுத்தியும்...
அல்ஹம்துலில்லாஹ்
அந்த வரிசையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் 14/02/2020 அன்று தன்னெழுச்சியாக குழுமிய பொது மக்களின் போராட்டத்தை தடுக்கும் நோக்கில் மோடியின் ஏவல்துறையாக மாறிப் போன தமிழக அரசின் சில மோசமான காவல்துறை அதிகாரிகளின் உத்தரவால்....
பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் முதியோர் என வேறுபாடு பார்க்காமல் கண்மூடித்தனமான தாக்குதலை, மனித நேயமற்ற கொடுரமான முறையில் காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது.
எந்த நியாயமான மனிதனும் ஏற்றுக்கொள்ள இயலாத இந்த கொடுஞ்செயலை கண்டித்தும்,
எங்களை அழிக்கின்ற சட்டத்தையும் கொண்டு வந்து விட்டு, அந்த சட்டத்தை திரும்பப் பெற கேட்டு ஜனநாயக வழியில் நாங்கள் போராடினால் எங்கள் மீது அடக்குமுறையையும் மேற்கொள்வீர்களா?? ... என்று கேட்டும்
அநியாயமாக தடியடி நடத்திய காவல் அதிகாரிகளை பதவி நீக்கி தண்டிக்க வலியுறுத்தியும்...
இனி இதுபோல தமிழகத்தில் எங்கும் நடக்கவிடக் கூடாது என்பதை அழுத்தமாக பதியவைக்கும் வகையில்...
திருப்பூர் பல்லடம் சாலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை (SP Office) முற்றுகையிடக் கூடிய மாபெரும் போராட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்...
(15.02.2020) சனிக்கிழமை காலை 11மணி முதல் 1;00 மணி வரை நடைபெற்றது
சகோதரர் அபூபக்கர் சஅதி அவர்கள் மக்களின் நியாயமான உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் கண்டன உரை நிகழ்த்தி ,
அரசும், காவல்துறையும் உரியமுறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், எடுக்காவிட்டால் இதுபோல பல போராட்டங்களை இந்த மக்களை கொண்டு முன்னெடுக்கப்படும் எனும் எச்சரிக்கையுடன் நிறைவு செய்தார்.
இதில் அனைத்து கிளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் இந்த சர்வாதிகார செயலை சகிக்க இயலாமல் உள்ளம் குமுறும் ஆண்கள், பெண்கள் அனைவரும் பெருந்திரளாக
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கி அணி திரண்டு வந்து
அறவழியில் அநியாயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்








