Pages

Saturday, March 14, 2020

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 13/03/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு  கூட்டம் 13/03/2020 வெள்ளிகிழமை அன்று  மாலை  5:00  மணி  முதல் மாவட்ட  தலைமையக  அலுவலகத்தில்   மாவட்ட தலைவர்  நூர்தீன்   தலைமையில்   நடைபெற்றது.




CAA, NRC, NPR   கருப்பு சட்டங்களை  நடைமுறை  படுத்தக் கூடாது  எனும் கோரிக்கையை  முன்னிறுத்தி  மாநில தலைமை அறிவித்த 
சிறை நிரப்பும் போராட்டத்திற்கான மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் என்னென்ன தகவல்கள் கருத்துக்களை சொல்வது என்றும்,

சிறை நிரப்பும் போராட்டத்தை சிறந்த முறையில் நடத்த என்னென்ன செயல்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் செயல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Friday, March 13, 2020

கோம்பைத்தோட்டம் கிளை செயற்குழு கூட்டம் 12/03/2020



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை செயற்குழு கூட்டம் மாவட்ட துணைச்செயலாளர் சேக் பரீத் தலைமையில் மற்றும்  மாவட்ட துணைச்செயலாளர் ஹனீபா அவர்கள் முன்னிலையில் 12/03/2020 அன்று கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்  மர்கஸில் நடைபெற்றது.

முதலாவதாக *அழைப்புப் பணியின் அவசியம்* எனும் தலைப்பில் மாவட்ட் பேச்சாளர் பசீர்அலி  அவர்கள் மார்க்க சிந்தனையுடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

அடுத்து சிறப்பாக தாவா மற்றும் சமுதாய பணிகளை செய்வதற்கு, நிர்வாக சீரமைப்பு தேவை என கலந்துகொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது.


தலைவர்: பாபு  90438 32610
செயலாளர்: அப்துல்லாஹ் MISc., 80565 53059
பொருலாளர்: ஷாஜகான் 90429 79014
துணைத்தலைவர் : சையது 81229 36621
து.செயலாளர்: இத்ரீஸ் 9952265355
மருத்துவணி : அன்சாரி 9677507500
மாணவரணி : அனீபா 93443 18811
அவர்களும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இனி வருங்காலத்தில் தாவா பணிகளை வீரியமாக செய்வது எனும் தீர்மானத்துடன் நிறைவுபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ் 




Thursday, March 12, 2020

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தில் மாதாந்திர தேர்வு 2

திருப்பூர் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தில் 11/03/2020 அன்று மாதாந்திர தேர்வுகள் (இரண்டாம் நாள்)  நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சகோதரர்.MI சுலைமான், மற்றும் மாவட்ட மதரசா பொறுப்பாளர் சகோதரர். இம்ரான் அவர்களும், இணைந்து இந்த தேர்வை நடத்தினார்கள்.

மாணவிகளின் கற்கும் திறனை மேம்படுத்த இதுபோல மாதாந்திர  மற்றும் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

மாணவிகள் இந்த தேர்வில் ஆர்வமுடன் கலந்து பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் -கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளை சார்பாக 11/3/2020 அன்று குமரன் மருத்துவமனையில் தேவிபிரியா என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக A1+ve ஒரு யூனிட் இரத்தம்
சகோதரர். ஆரிப் அவர்கள் மூலம் *அவசர இரத்ததானம்* வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, March 11, 2020

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தில் மாதாந்திர தேர்வு


திருப்பூர் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தில் 11/03/2020 அன்று மாதாந்திர தேர்வு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சகோதரர்.MI சுலைமான், மற்றும் மாவட்ட மதரசா பொறுப்பாளர் சகோதரர். இம்ரான் அவர்களும், இணைந்து இந்த தேர்வை நடத்தினார்கள்.
மாணவிகளின் கற்கும் திறனை மேம்படுத்த இதுபோல தேர்வுகள் மற்றும் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
மாணவிகள் இந்த தேர்வில் ஆர்வமுடன் கலந்து பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளைசந்திப்பு 11/03/2020

NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும் இன்ஷா அல்லாஹ் மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம் எனும்  அறிவிப்பை தொடர்ந்து

திருப்பூரில் மாவட்ட சிறை  முன்பாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்  கிளைசந்திப்பு   11/03/2020 காலை  6:30முதல் அனுப்பர்பாளையம் மர்கஸில் நடைபெற்றது.

இதில்  மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், அவர்கள் கலந்து கொண்டு,

அநீதிக்கு எதிரான நமது போராட்டங்களை எவ்வாறு அணைத்து சமுதாய மக்களுக்கும் நலன் ஏற்படும் வகையிலும், அரசுதுறைகளின் கவனத்தை பெரும் வகையில் அமைப்பது என்றும், 
நிர்வாகிகள் பேச்சாளர்கள் நமது செயல்பாடுகளை எவ்வாறெல்லாம் அமைத்து சமுதாய நலனுக்கு சேவைகள் செய்வது என்பது பற்றியும்,
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

5 கிளைகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் 10/03/2020


NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும் இன்ஷா அல்லாஹ் மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம் எனும்  அறிவிப்பை தொடர்ந்து

திருப்பூரில் மாவட்ட சிறை  முன்பாக சிறை நிரப்பும் போராட்டம் முடிவு செய்யப்பட்டது.

அதற்காக *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருப்பூர் மாவட்டம் மங்கலம், இந்தியன் நகர், VKP, RP நகர் மற்றும் சின்னவர் தோட்டம் ஆகிய 5 கிளைகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் 10/03/2020 இரவு 9:30முதல் இந்தியன் நகர் மர்கஸில் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் நூர்தீன், மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு,

அநீதிக்கு எதிரான நமது போராட்டங்களை எவ்வாறு அணைத்து சமுதாய மக்களுக்கும் நலன் ஏற்படும் வகையிலும், அரசுதுறைகளின் கவனத்தை பெரும் வகையில் அமைப்பது என்றும்,

உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், உரிமைகளை வென்றெடுப்பதற்கு இறைவனின் உதவியுடன் இறைதூதரின் வழிகாட்டுதல்களை மீறாமல், முஸ்லிமாகவே இருந்து போராடுவது என்றும், 

நமது நோக்கம் அநியாய சட்டங்கள் நீக்கப்பட்டு முஸ்லிம்கள் மட்டுமல்லாது அணைத்து சமுதாய மக்களும் அமைதியாக இந்தியாவில் வாழ வழிவகை ஏற்படுத்துவதே என்றும்,

அமைதியை குலைக்கும் வகையில் சமூக எதிரிகள் யார் செயல்பட்டாலும் நாம் சரியான வழிகாட்டுதலுடன் ஜனநாயக அடிப்படையில் போராடி வெற்றி பெற வேண்டும் என்றும்,
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.



Tuesday, March 10, 2020

அல்கைராத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி கண்காணிப்பு ஆய்வு 09032020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 09/03/2020 அன்று திருப்பூர் அல்கைராத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி கண்காணிப்பு ஆய்வு நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட மதரசா கண்காணிப்பாளர் சகோதரர். யாசர் அரபாத் அவர்களும், சகோதரர். அபூபக்கர் சஅதி அவர்களும் இணைந்து, மதரசா மாணவிகளின் கல்விதரம் மற்றும் திறன் பற்றி பல்வேறு ஆய்வுகள் செய்தனர்.
மாணவிகளின் திறனை மேம்படுத்திய ஆசிரியர்களை பாராட்டி, கூடுதலாக மாணவிகளின் கல்வித்திறனை அதிகரிக்கும் வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்