தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22/12/2019 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "சென்னை *கவர்னர் மாளிகை நோக்கி பேரணி* பற்றி அவசர செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் இந்த கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்கள்.
மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத் அவர்கள் "இறுதி வெற்றி கொள்கை உறுதிக்கே" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
மாநில செயலாளர். *சகோ. தாவூத் கைசர்* அவர்கள்பேரணியின் முக்கியத்துவம் மற்றும் நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார்கள்.
நமது வாழ்வுரிமை பிரச்சனைக்காக, நமது சந்ததிகளின் எதிர்கால வாழ்வை பாதுகாக்க நடைபெறவுள்ள அந்த பேரணியில் நமது பகுதியில் எவ்வாறெல்லாம் பணி செய்து மக்களை திரட்டிச் செல்ல வேண்டும் எனும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி
கிளைகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மற்றும் மக்களின் வருகையை கேட்டறிந்தார்கள்.
சமுதாயத்திற்கான, போராட்டத்தை எப்படி செயல்படுத்தலாம் எனும் ஆலோசனை கூட்டத்திற்கே, நிர்வாகிகள் பேச்சாளர்கள், மற்றும் தன்னார்வலர்கள் என வளாகம் நிரம்பி வழியும் வகையில் பெருந்திரளாக
இந்தப் பேரணியின் ஆரம்ப வெற்றியாகவே அமைந்தது.
குடியுரிமை திருத்த சட்டம் நீக்கமே இறுதி வெற்றியாக அமையட்டும் எனும் பிரார்த்தனையுடன் களம் காண்போம் எனும் உறுதியுடன் செயல்வீரர்கள் கூட்டம் நிறைவுபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...






No comments:
Post a Comment