Pages

Thursday, December 26, 2019

மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 25122019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 25/12/2019 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாக குழுக் கூட்டம் மாவட்ட தலைவர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.




















மதரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தும்
*குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி...*


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக *மாநிலம் தழுவிய அளவில்* இன்ஷாஅல்லாஹ் *டிசம்பர் 28* அன்று சென்னை *கவர்னர் மாளிகை நோக்கி பேரணி* நடத்தவுள்ளதற்காக

மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் செய்து பணிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.



மாவட்ட நிர்வாகம் சார்பில் பயண துஆ, பயண வழிகாட்டல், டோல் கடிதம், மருந்துகள், மதிய உணவு தயார் செய்து வழங்கவும், முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, December 24, 2019

ஆலோசனைகூட்டம் _ உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 24.12.19 அன்று, உடுமலை  கிளை   ஆலோசனைகூட்டம்   கிளை மர்கஸில், மாவட்ட  பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள்  தலைமையில்   நடைபெற்றது.





இதில் முஸ்லிம்களை அகதிகளாக்கும் அநியாய குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி இன்ஷாஅல்லாஹ் வரும் 28/12/2019 அன்று நடைபெறவுள்ள சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணிக்கு செய்துள்ள பணிகள் பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கிளை நிர்வாகிகள், மற்றும் கிளை சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து  கருத்துக்களை பரிமாறி செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.



உடனடியாக சுன்னத் ஜமாஅத் பள்ளிகளுக்கு சென்று இமாம்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேரணிக்கு  அழைப்பு கொடுக்கப்பட்டது. 
 
அல்ஹம்துலில்லாஹ்.

பெரிய தோட்டம் கிளை சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 23.12.19 அன்றுபெரிய தோட்டம் கிளை சந்திப்பு  கிளை  மர்கஸில்,கிளை பொறுப்பாளர்,    மாவட்ட   துணைச்செயலாளர் ஷேக் பரீத் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

இதில் முஸ்லிம்களை அகதிகளாக்கும் அநியாய குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி இன்ஷாஅல்லாஹ் வரும் 28/12/2019 அன்று நடைபெறவுள்ள சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணிக்கு செய்துள்ள பணிகள் பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 கிளை நிர்வாகிகள், மற்றும் கிளை சகோதரரர்கள் ஆர்வமுடன்  கலந்து கருத்துக்களை பரிமாறி செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, December 23, 2019

மாவட்ட நிர்வாககுழுக் கூட்டம் 22122019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 22/12/2019 அன்று இரவு  மாவட்ட மர்கஸ் வளாகத்தில்   மாவட்ட  நிர்வாககுழுக் கூட்டம் மாவட்ட தலைவர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற  அவசர மாவட்ட செயல்வீரர்கள் கூட்ட நிகழ்வுகளும், பெரும்திரளாக கலந்துகொண்ட மக்களை இனி சரியாக வழிநடத்தி, சென்னை கவர்னர் மாளிகை பேரணியையும் திருப்பூர் மாவட்டம் சார்பில் சிறப்பாக செய்ய பல்வேறு முடிவுகளை ஆலோசனை செய்து எடுக்கப்பட்டது.

  

அல்ஹம்துலில்லாஹ்.

அவசர செயல்வீரர்கள் கூட்டம் 22122019




 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22/12/2019 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "சென்னை *கவர்னர் மாளிகை நோக்கி பேரணி* பற்றி அவசர செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.





மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் இந்த கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்கள்.




மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத் அவர்கள் "இறுதி வெற்றி கொள்கை உறுதிக்கே" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

மாநில செயலாளர். *சகோ. தாவூத் கைசர்* அவர்கள்




பேரணியின் முக்கியத்துவம் மற்றும் நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார்கள்.



நமது வாழ்வுரிமை பிரச்சனைக்காக, நமது சந்ததிகளின் எதிர்கால வாழ்வை பாதுகாக்க நடைபெறவுள்ள அந்த பேரணியில் நமது பகுதியில் எவ்வாறெல்லாம் பணி செய்து மக்களை திரட்டிச் செல்ல வேண்டும் எனும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி
கிளைகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மற்றும் மக்களின் வருகையை கேட்டறிந்தார்கள்.

முதல் கட்டமாக 11 பஸ்களும், 35 வேன்களும் புக் செய்யப்போவதாக கிளை நிர்வாகிகள் வாக்களித்தனர்

சமுதாயத்திற்கான, போராட்டத்தை எப்படி செயல்படுத்தலாம் எனும் ஆலோசனை கூட்டத்திற்கே, நிர்வாகிகள் பேச்சாளர்கள், மற்றும் தன்னார்வலர்கள் என வளாகம் நிரம்பி வழியும் வகையில் பெருந்திரளாக
உத்வேகத்துடன் கலந்து கொண்டது



இந்தப் பேரணியின் ஆரம்ப வெற்றியாகவே அமைந்தது.

குடியுரிமை திருத்த சட்டம் நீக்கமே இறுதி வெற்றியாக அமையட்டும் எனும் பிரார்த்தனையுடன் களம் காண்போம் எனும் உறுதியுடன் செயல்வீரர்கள் கூட்டம் நிறைவுபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்...


Sunday, December 22, 2019

கவர்னர் மாளிகை நோக்கி பேரணி / நோட்டீஸ்





இந்தியர்களை மதரீதியாக பிரிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்ஷாஅல்லாஹ் 28/12/2019 அன்று  சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணி யை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் போஸ்டர்கள் 500 அடிக்கப்பட்டது.