குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும்,
இச்சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தியும் 25.01.2020 சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலங்களை நோக்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பேரணி நடைபெற்றது .
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி மாவட்டத் தலைவர் நூர்தீன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைத் தலைவர் யாசர் அராபத், மாவட்ட துணைச் செயலாளர்கள், அப்துர் ரஷீத், ஷேக் பரீத், ரபீக், சித்திக், ஹனிபா, மற்றும் மாவட்ட அணிச் செயலாளர்கள் இம்ரான், ஜாகிர், ஜெய்லானி, அப்பாஸ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.தென்னம்பாளையம் காதர் சலிமா திருமண மண்டபத்திலிருந்து பல்லடம் மெயின் ரோடு வழியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றது.
இப்பேரணியில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் கைகளில் தேசிய கொடி ஏந்தி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷங்களை முழங்கினர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், என்.பி.ஆர், என்.ஆர்.சி. சட்டங்களுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

மாவட்ட கலக்டர் அலுவலகம் எதிரில் அமைக்கப்பட்ட தற்காலிக மேடையில்
மாநில தலைவர் சகோ. ஷம்சுல்லுஹா ரஹ்மானி கண்டன உரை நிகழ்த்தினார்.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் நாட்டு மக்களை அவதிக்குள்ளாக்கும் சட்டமாகும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் சமூக அக்கறை கொண்டவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்திய விடுதலைக்குப் பிறகு நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவது தற்போது தான் என்று குறிப்பிடும் அளவுக்கு இந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வீரியமடைந்துள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டத்திலிருந்து ஒரு அங்குலம் கூடப் பின்வாங்கப் போவதில்லை என்று உள்துறை அமைச்சர் அமீத்ஷா தெரிவித்துள்ளார். நாங்களும் எங்கள் போராட்டத்திலிருந்து ஒரு அங்குலம் கூடப் பின்வாங்க மாட்டோம் என்பதை உணர்த்தும் விதமாகத்தான் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது.
நாடெங்கிலும் மக்கள் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.யை எதிர்த்துக் கொண்டிருக்கும் வேளையில் மத்திய பாசிச அரசு எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் என்பிஆரை செயல் படுத்தத் துடிக்கின்றது.
கோடிக்கணக்கான மக்களை அகதிகளாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக அரசு ஆதரித்தது வேதனை அளிக்கிறது.
எனவே, தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகிய சட்டங்களை தமிழகத்தில் நடைமுறைபடுத்த மாட்டோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்.
இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்தப் பேரணியில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு, கோஷங்களை எழுப்பியும், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர். சட்டங்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்














No comments:
Post a Comment