Pages

Saturday, February 08, 2020

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 07/02/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 07/02/2020 அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.



இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் 09/02/2020 அன்று மங்கலம், மற்றும் உடுமலையில்  அணைத்து ஜமாஅத் அமைப்புகள் சார்பில் நடக்கவுள்ள குடியுரிமை திருத்த சட்ட கண்டன  பொதுக்கூட்டங்களில்  சமுதாய நலனுக்குக்காக அந்தந்த பகுதி கிளை சார்பில் பெருமளவில் மக்களை திரட்டி கலந்து கொள்ள ஏற்கனவே அறிவிருத்தப்பட்ட நிலையில் பொறுப்பாளர்கள் கூடுதலாக கிளைகளுக்கு நினைவூட்டி பணியாற்ற முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட அம்புலன்ஸ் ஐ ஏற்கனவே இயக்கி பணி  முடிவு பெற்ற சகோதரருக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment