Pages

Tuesday, March 03, 2020

மாபெரும் தர்ணா போராட்டம் _1032020- அனுப்பர்பாளையம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 01/03/20, அன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.


இதில், அவினாசி கிளை மற்றும் ஆத்துப்பாளையம் கிளையை சேர்ந்தவர் களும் பங்கேற்றார்கள் மாவட்ட துணைச்செயலாளர் சித்தீக் தலைமையேற்றார், 


மாவட்ட பேச்சாளர்கள், அப்துல்லா MiSC,....   பேசியபோது....

 குடியுரிமை திருத்த சட்டம் இந்திய மக்கள் அனைவருக்கும்  எதிரானதாகும்.

இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்க ஒருவர் தனது பிறப்புச் சான்று முதல் தகப்பனார், பாட்டனார் பிறப்புச் சான்றிதழ் வரை  சமர்ப்பிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.

இதனால் இந்தியாவில் வாழும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு அகதி பட்டியலிலேயே சேர்க்கப்படுவார்கள்.

அசாமில் அகதிகளாக குடியேறிய மக்களை கண்டறிய இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசாங்கம் சொல்லிவிட்டு,  தற்போது கொல்லைப்புறமாக இந்தியா முழுவதும் இக்கொடிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறது.


தமிழகத்தில் வாழ்கிற மக்கள்  பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர்கள் இல்லை என்கிற பொழுது இவர்களுக்கு இந்த சட்டம் எப்படி பொருந்தும் இவர்கள் ஏன் தனது குடியுரிமை நிருபிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

 இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் குடியுரிமை கேட்டு வருகின்றனர் அவர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை மறுத்து இருப்பது கண்டனத்திற்குரியது.

 தமிழகத்தில்  கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்க மாட்டார்கள் இவர்கள் அனைவருமே NRC  சட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தும் தமிழக அரசாங்கம் அமைதி காப்பது வேதனையளிக்கிறது.

 CAA,NRC, NPR, சட்டத்தை ஆதரித்த பல மாநில முதல்வர்கள் கூட தற்போது அந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.

மேற்கு வங்கம்,  பஞ்சாப்,  பீகார்,  ,  பாண்டிச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்  உள்ளிட்ட மாநிலங்களில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தெலுங்கானாவில் அமைச்சரவையில் இந்த சட்டத்திற்கு எதிராக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் சட்ட மன்றத்தில் தீர்மானமாக இயற்றப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் அறிவித்துளார்.

மாநில மக்களின் உரிமையை மாநில அரசாங்கங்கள்  பாதுகாத்தது  போல தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.

மற்றும் சர்புதீன், முஹம்மது அலி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள், 

கிளை துணைத் தலைவர் ஜாபிர் நன்றி உரை நிகழ்த்தினார். 

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment