தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, (11/10/2021) இரவு 9:00 மணியளவில் காலேஜ்ரோடு கிளை சந்திப்பு நடைபெற்றது
மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில், கிளை பொறுப்பாளர் மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்பாஸ் அவர்கள்
முன்னிலையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், இனி செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
1. குர்ஆன் வகுப்பு, தெருமுனைப் பிரச்சாரம், மற்றும் பெண்கள் பயான் ஆகியவைகளை
தொடர்ந்து நடத்த வலியுறுத்தப்பட்டது.
2. சக உறுப்பினர்களை இணைத்து மக்கள்
மத்தியில் தாவா பணிகளை வீரியப்படுத்தி கொண்டு செல்ல ஆலோசனை வழங்கப்பட்டது
3. காலேஜ்ரோடு பகுதியில் திருக்குர்ஆன்
தமிழாக்கம் தேவையா என்ற DTP போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட ஆலோசனை வழங்கப்பட்டது
4. பெண்கள் தாவா குழு அமைக்க ஆலோசனை வழங்கப்பட்டது
5. கிளையில் எந்த தாவா பணி செய்தாலும் அதை உடனடியாக நமது இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்று ஆலோசனை
வழங்கப்பட்டது
6. ஞாயிற்றுக்கிழமை தாவாக்களை இரண்டு (டீமாக) பிரித்து தாவா பணிசெய்ய ஆலோசனை
வழங்கப்பட்டது
7,ஒவ்வொரு வாரமும் தவறாமல் கிளை மசூரா நடத்தவேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது
8. பிரச்சாரங்களுக்கு தேவையான தாயிக்கள்
சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது
9. கிளையில் மக்தப் மதரஸா நடத்துவது
சம்பந்தமாகவும் மற்றும் பெற்றோர்கள் சந்திப்பு என பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment