தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 1-12-2021 அன்று இரவு இஷாத் தொழுகைக்கு பிறகு மங்கலம் கிளை மர்கஸில் திருப்பூர் மாவட்ட மருத்துவரணி பொறுப்பாளர் சகோ.அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட மருத்துவரணி குழு மசூரா நடைபெற்றது.
இதில் மாவட்ட மருத்துவரணி குழுவின் அவசியம் குறித்து மாவட்ட தலைவர் சகோ. சிக்கந்தர் அவர்கள் விளக்கம் வழங்கினார்.
அதை தொடர்ந்து மருத்துவரணி சார்ந்த பணிகளை வீரியப்படுத்துவதற்கான குழுவின் பணிகள் குறித்து விளக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
🔶 மருத்துவம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாரந்தோறும் இரண்டு போஸ்ட் கிரியேட் செய்து வெளியிடுதல்
🔶கிளைகள் செய்ய இயலும் வகையிலான மருத்துவ முகாம்கள் சம்பந்தமாக லிஸ்ட் தயார் செய்து அதற்கான வழிகாட்டுதல் அடங்கிய தொகுப்புகளை தயார் செய்தல்
🔶நிலவேம்பு கபசூர குடிநீர் தயார் செய்து விநியோகம் செய்யும் கிளைகள் மற்றும் இரத்த தான முகாம் நடத்தும் கிளைகள் கவனத்திற்கு என்ற தலைப்பில் அதற்கான வழிமுறைகள் அடங்கிய தொகுப்புகள் தயார் செய்தல்
🔶மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழிமுறைகள் குறித்து பேசப்பட்டது.
🔶மாதந்தோறும் இரத்த தானம் செய்யும் கிளைகளின் விபரங்கள் தொகுத்து போஸ்ட் தயார் செய்து வெளியிடுதல்
ஆகிய மேற்கண்ட பணிகளை மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று செயல்படுத்துவதென்று முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment