Pages

Friday, August 20, 2021

அனுப்பர்பாளையம் கிளை உதவிக்கு ஆலோசனை 20082021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை மர்கஸ் இடம் வகைக்காக, மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள கிளைகளில் 20.08.21வெள்ளி அன்றைய  ஜும்ஆ வசூல் செய்து கொள்ள அனுமதி வழங்கி இருந்தனர்.

அந்த வசூலை எடுப்பதற்காக திருப்பூர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட தாயிக்கள், அனுப்பர்பாளையம் கிளை நிர்வாகிகள் இணைந்து 20.08.21 வெள்ளி  அன்று மதுரை சென்று  மதுரை  மாவட்டம்  கோரிபாளையம் பள்ளி மர்கஸில்  மாவட்ட  செயலாளர்  ஜாகீர் அப்பாஸ் அவர்கள்   தலைமையில் ஆலோசனை நடத்தினார்கள்.



இதில் எவ்வாறெல்லாம் மக்களிடம் அனுப்பர்பாளையம்  கிளை நிலவரங்களை எடுத்து சொல்லி வசூல் செய்வது என்பது பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கினார்கள்.  

அல்ஹம்துலில்லாஹ்

 

அலங்கியம் கிளை சந்திப்பு 20082021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  20.08.21வெள்ளி அன்று  அலங்கியம்   கிளை  சந்திப்பு   கிளை   மர்கஸில்    மாவட்ட   துணை  செயலாளர்  அப்துல் ரஷீத்  அவர்கள்    தலைமையில்,  நடைபெற்றது. 


 

கிளையின் தாவா பணிகள்நிர்வாக செயல்பாடுகள் பற்றி  கேட்டறிந்து எதிர்கால தாவா பணிகளை  மேம்படுத்துவது  சம்பந்தமாக  மாவட்ட  நிர்வாக  ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, August 16, 2021

அனுப்பர்பாளையம் கிளை புதிய மர்கஸ் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  16.08.21   திங்கள் அன்று   அனுப்பர்பாளையம்  கிளை சந்திப்பு   கிளை மர்கஸில்  மாநில செயலாளர் சித்தீக் அவர்கள்  தலைமையில்,  மாவட்ட செயலாளர்  ஜாகிர் அப்பாஸ்,  மாவட்ட வர்த்தகரணி  செயலாளர்  காஜா பாய் முன்னிலையில் நடைபெற்றது. 


 







அனுப்பர்பாளையம் கிளை மர்கசுக்கு  சொந்தமாக வாங்கப்பட்ட கட்டிட  பத்திர பதிவு இன்றைய தினம் செய்யப்பட்டது பற்றியும்,

 

மர்கஸ் இடத்தை மாநில, மாவட்ட நிர்வாகிகள் பார்வையிட்டதை பற்றியும்

 

விரிவாக கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி, வருங்கால தாவா பணிகள் மற்றும் நிர்வாகப் பணிகளை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


 

அல்ஹம்துலில்லாஹ்

 

 

 

சின்னவர் தோட்டம் கிளை பொதுக்குழு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  சின்னவர் தோட்டம்  கிளை  3வது பொதுக்குழு 15/08/2021 அன்று மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்  தலைமையில், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் காஜா பாய் முன்னிலையில் நடைபெற்றது

 

இதில் கிளை செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டு நிர்வாக தேர்வு நடைபெற்றது.

 

தலைவர்: K.முஹம்மது தவ்ஃபீக் 9150507968

செயலாளர் A. தவ்ஃபீக் பிலால் 8754118061

பொருளாளர் ஆபித் 9944193364

துணைத் தலைவர் நாசர் 9944931411

துணைச் செயலாளர் இப்ராஹீம் 6383766126

மாணவரணி இத்ரீஸ் 6385299866

மருத்துவ அணி ஹசன் 6380241145

தொண்டரணி தஸ்லீம் 8754851145

வர்த்தக அணி அலாவுதீன் 7373943311

ஆகிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு  முழு நிர்வாகம் அமைக்கப்பட்டது.


 மாவட்ட நிர்வாகம் சார்பில் வருங்கால தாவா பணிகள் பற்றியும் நிர்வாக  பணிகளை சிறப்பாக செயல்படுத்துவது பற்றியும் மாவட்ட நிர்வாகம் சார்பில்  ஆலோசனை வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, August 15, 2021

இரத்ததான முகாம் 15-08-2021 _மங்கலம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை சார்பாக #75வது_சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் #இரத்ததான_முகாம்  


15-08-2021  அன்று காலை 10:00  மணி முதல் மதியம் 2:00 வரை மங்கலம் சமுதாய கூடத்தில் பெருந்துறை அரசு மருத்துவமனை யுடன் இணைந்து  நடைபெற்றது.



இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு 50  யூனிட் இரத்தம் தானமாக வழங்கினார்கள்





இந்த நிகழ்வில் TNTJ மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ், TNTJ மாவட்ட துணை தலைவர்  யாசர் அராபத், இமாம் அபூபக்கர் சஅதி, மங்கலம் கிளை நிர்வாகிகள், பிற கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டரணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 





  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக இந்த சமுக சேவைப்பணியில்  கலந்து கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும்,  





பிறமத சகோதரர்களுக்கும்    இஸ்லாமிய   புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது.




இரத்த தானம் வழங்கியவர்களுக்கும், சிறப்பாக ஏற்பாடுகள் செய்து மக்கள் நலப்பணி செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை நிர்வாகத்திற்கும், அரசு மருத்துவமனை சார்பில் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.



இந்த சமுதாய சேவைப்பணியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட, பணியாற்றிய, உதவியும் ஒத்துழைப்பும் வழங்கிய  அனைவருக்கும் இறைவன் நல்லருள் செய்ய பிரார்த்தனையையும், நன்றியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

                  அல்ஹம்துலில்லாஹ்