Pages

Saturday, February 12, 2022

ஹிஜாப்_ கண்டன ஆர்ப்பாட்டம் - திருப்பூர் 11/02/2022


கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து, அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகங்களையும் பாசிச பாஜக அரசையும் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 2022 பிப்ரவரி 11 வெள்ளிக் கிழமை மாலை 4:30 மணி முதல் 6:15மணி வரை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு

மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் மங்கலம் நூர்தீன் அவர்கள்

கண்டன முழக்கத்துடன் ஆரம்பமான ஆர்பாட்டத்தில்,



சகோதரி ஆலிமா. அர்ஷிதா (மேலப்பாளைம் அல்இர்ஷாத் பெண்கள் இஸ்லாமிய கல்வியக முன்னாள் ஆசிரியை) அவர்கள்


ஹிஜாப் பெண்களின் உரிமைப் பாதுகாப்பு என்று உரை நிகழ்த்தி இந்த ஹிஜாப் எனும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய பாதுகாப்பு உரிமையை இழக்க விட மாட்டோம்,. உறுதியடன் போராடியாவது மீட்டெடுப்போம் என தெளிவாக பதிவு செய்தார்.


தொடர்ந்து கண்டன முழக்கங்களை மாவட்ட பேச்சாளர்கள் அன்சர் MISc., VSA நகர் இம்ரான் மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் அவர்கள் உணர்வு பூர்வமாக பதிவு செய்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் அவர்கள்


நமது உரிமைக் காண போராட்டத்தின் மூலம் ஆளும் ஆட்சியாளர்களின் செவிகளுக்கும், தொடர் மதவெறி போக்கை கைய்யாளும் காவி சங்பரிவாரத்தின் சூழ்ச்சிகளுக்கும் எதிராகவும் அழுத்தமாக #அல்லாஹுஅக்பர் எனும் முழக்கம் மூலம் கலந்துகொண்ட பல்லாயிரக் கணக்கானோரின் உணர்வுகளை திருப்பூர் மட்டுமல்லாது உலகமே கவனிக்கும் வகையில் சரியாக பதிவு செய்தார்.


மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் அவர்கள் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

மாவட்ட பொருளாளர் அப்துல்ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் உடுமலை அப்துல் ரஷீத், பல்லடம் காஜா பாய், கோம்பைத்தோட்டம் GOLD ஹனீபா, பெரியதோட்டம் ரபீக், மாவட்ட தொண்டரணி செயலாளர் உடுமலை சுலைமான் சேட் உள்பட


பெருவாரியான மாணவியர், மகளிர், குழந்தைகள், ஆண்கள் என பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு எழுச்சியுடன் தங்கள் கண்டங்களை பதிவு செய்து ,

இந்த ஹிஜாப் உரிமைப் பறிப்பை மீட்போம் என்றும், வருங்காலத்தில் இது போன்ற உரிமை பறிப்புகள் யாருக்கும் எங்கும் நடக்க விட மாட்டோம் எனும் சூளுரையுடன்


மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் MISc.,அவர்களின் நன்றி உரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்



No comments:

Post a Comment