தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (4)
28/01/2022 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு VKP கிளை மர்கஸில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது
தன்வீர் தலைமையில் மாவட்ட தலைவர் சிக்கந்தர்
அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில்
ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுகள்:
1. கிளைகள் தோறும் வாக்காளர் அட்டை, ரேசன் கார்டு திருத்தம் செய்யும் முகாம் நடத்த, வழிகாட்டுதல்
வழங்குவது என்றும்,
2 அரசுப்பணியாளர்கள் தேர்வு Group 4
யாரெல்லாம் எழுதலாம்? என்ன பயன்? என்பதை பற்றி மாணவர்களை திரட்டி வழிகாட்டு
நிகழ்ச்சி நடத்துவது என்றும்,
3 மங்கலம் மற்றும் அதை சுற்றி
உள்ள 6 கிளை மாணவரணி பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி மாணவரணி சேவைப்பணிகளை
வீரியப்படுத்துவது என்றும்,
4. மங்கலம் மற்றும் அதை சுற்றி உள்ள 6 கிளை மாணவரணிக்கு,
மாவட்ட தர்பியா நடத்துவதும் என்றும் முடிவு
செய்ய்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.