Pages

Thursday, June 30, 2022

திருப்பூர் மாவட்ட 36வது புதிய கிளை “காதர் பேட்டை கிளை” _29062022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காதர் பேட்டை கிளை   29/06/2022 புதன் கிழமை மாலை திருப்பூர் மாவட்ட தலைவர் சிக்கந்தர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. 


இதில்   திருப்பூர் மாவட்ட 36வது புதிய கிளை  “காதர் பேட்டை கிளை” துவங்கப்பட்டது.

 


இதில் சகோ.அப்துல் ரஹ்மான் -  9865149810

 

சகோ.முபாரக் அலி - 9994541684

 

சகோ.அஷ்ரப் கான் - 85266 33441

 

ஆகியோர் காதர்பேட்டை கிளையின் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்...

 

தேர்வு செய்யப்பட புதிய நிர்வாக குழுவிற்கு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Sunday, June 26, 2022

இரத்ததான முகாம் _ பெரிய தோட்டம் கிளை _26062022

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை மற்றும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து


26/06/2022 அன்று மாபெரும் இரத்ததான முகாம்
திருப்பூர் பெரிய தோட்டம் கிளை மர்கசில் நடைபெற்றது.



இந்த இரத்ததான முகாம் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அஜீஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ஹனீபா ,மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் MISc., மற்றும் பெரியதோட்டம் கிளை நிர்வாகிகள் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்றது


இதில் ஏராளமான சகோதரர்கள் இளைஞர்கள் பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்பதை எடுத்து காட்டும் வகையில் சமூக சேவையை செய்ய ஆர்வமுடன் இரத்ததான முகாமில் கலந்து 41 யூனிட் இரத்ததானம் செய்தனர்.














இந்த முகாமில் கலந்து இரத்ததானம் வழங்கியவர்களுக்கு தமிழக அரசின் பாராட்டு சான்றிதல் மற்றும் கிளை சார்பில் இரத்த கொடையாளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.










சுயநலத்துடன் வாழும் மக்கள் மத்தியில் தொடர்ந்து இதுபோன்ற சமூக சேவையில் ஈடுபட வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி தெரிவித்தவர்களாக






இந்த முகாமில் கலந்து சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பெரிய தோட்டம் கிளை நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

பல்லடம் கிளை நிர்வாக சீரமைப்பு _26062022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 26-6-2022 அன்று பல்லடம் கிளை நிர்வாக சீரமைப்பு மாவட்ட  தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில்  பல்லடம் கிளை மர்கஸில் நடைபெற்றது.





இதில் பல்லடம் கிளை சார்பில் கோரிக்கைகள் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு   காலியாக இருந்த பொறுப்புகளுக்கு  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் 



பல்லடம் நகர கிளை முழு நிர்வாகம் விபரம் :-


தலைவர் : A.மீரான் 9791467593


செயலாளர் : சாகுல் ஹமீது 9944849965 


பொருளாளர் : உமர் பாரூக் 7904909 255


துணைத்தலைவர்: சிராஜ் தீன் 9843896811


துணை செயலாளர் : அக்பர்அலி  9442614814


துணை செயலாளர் :  நூர்தீன் 9715005655

 

மாணவரணி : சாதிக்உசேன் - 9344864573


மருத்துவரணி -அப்துல் காதர் 9486417727


தொண்டரணி - சவுக்கத் அலி :9944473998


 மேலும் கிளை சார்பாக நடைபெற்று வரும் தாவா மற்றும் சமுதாயப் பணிகளுக்கு கிளை உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தப்பட்டது.


அடுத்தகட்ட தாவா மற்றும் சமுதாயப் பணிகள் சம்பந்தமாக கிளை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான பேச்சுப் பயிற்சி _ திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 26-06-2022 அன்று ஆண்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு தொடர்ந்து ஐந்தாவது வாரமாக மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.

இதில் சகோ.அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் பயிற்சி வழங்கினார்.

இந்த பயிற்சி வகுப்பில் ஆண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்

காமராஜ் நகர் கிளை சந்திப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 26-6-2022 அன்று காமராஜ் நகர் கிளை சந்திப்பு மாவட்ட  தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில்   காமராஜ் நகர் கிளை மர்கஸில் நடைபெற்றது.



இதில் கிளை சார்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


காமராஜ் நகர் கிளை சார்பாக நடைபெற்று வரும் மக்தப் மதரஸாவை மேம்படுத்தும் வகையில் மதரஸா பெற்றோர் சந்திப்பு நடத்துவது மதரஸா யூனிபார்ம் மக்கானா, ID CARD, மதரஸா பேக் கிளை சார்பாக ஏற்பாடு செய்து தருவது சம்பந்தமாகவும்


பெண்கள் பயான் வாரந்தோறும் 2 வீடுகளில் கிளையில் ஏற்பாடு செய்வது சம்பந்தமாகவும்


ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமாகவும்


 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்குதல், இரத்த வகை கண்டறியும் முகாம், ரேசன் கார்டு திருத்த முகாம், இலவச டியூசன் வகுப்புகள் சம்பந்தமான பணிகள் குறித்தும்  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


மாவட்டத்திற்கான கிளையின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்