Pages
▼
Saturday, December 21, 2019
நிர்வாககுழுக் கூட்டம் 20122019
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 20/12/2019 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாககுழுக் கூட்டம் மாவட்ட தலைவர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.
மத ரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா திரும்ப பெறக்கோரி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநிலம் தழுவிய அளவில் இன்ஷாஅல்லாஹ் டிசம்பர் 28 அன்று சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தவுள்ளதற்காக
அவசர மாவட்ட செயற்குழு இன்ஷாஅல்லாஹ் 22/12/2019 ஞாயிறு மாலை மக்ரிபுக்கு பிறகு மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடத்துவது என்றும் அதில் என்ன என்ன விசியங்கள் கலந்துகொள்ளும் மக்களுக்கு தெரிவிப்பது என்றும் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, December 19, 2019
கண்டன ஆர்ப்பாட்ட பத்திரிக்கை செய்திகள்
மத ரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா (CAB) வைக் கண்டித்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 18/12/2019 புதன்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் நடைபெற்றது.
கணக்கம்பாளையம் கிளை நிர்வாக சந்திப்பு 18/12/2019
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 18.12.19
அன்று, மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் கணக்கம்பாளையம் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
கணக்கம்பாளையம் கிளை பகுதியில் ஒரு சகோதரரின்
இடத்தில் 02/02/2018 முதல் ஜும்ஆ மர்கஸ் அமைத்து, ஜும்ஆ தொழுகைகள் நடைபெற்று வந்தது. அந்த
இடத்தை நமக்கு வழங்கிய சகோதரருக்கு அந்த இடம் தேவை ஏற்பட்டதால் வரும் 31/12/2019 வுடன் காலி செய்து தரவேண்டி
இருப்பதை பற்றியும்,
அந்த பகுதியில் புதிய இடத்தில் மர்கஸ் அமைத்து குழந்தைகள் மதரசா, ஐவேளைத்தொழுகை, ஜும்ஆ தொழுகை மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்யும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகிகள்
மற்றும் கணக்கம்பாளையம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
பெரியகடை வீதி கிளை நிர்வாக சந்திப்பு 18/12/2019
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 18.12.19
அன்று, மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் பெரியகடை வீதி கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
பெரியகடை வீதி கிளை பகுதியில் ஒரு சகோதரரின்
இடத்தில் 28.12.2012 முதல் ஜும்ஆ மர்கஸ் அமைத்து, மதரசா மற்றும் ஜும்ஆ தொழுகைகள்
நடைபெற்று வந்தது. அந்த இடத்தை நமக்கு வழங்கிய சகோதரருக்கு அந்த இடம் தேவை
ஏற்பட்டதால் வரும் 27/12/2019 ஜும்ஆ வுடன் காலி செய்து தரவேண்டி இருப்பதை பற்றியும்,
அவருக்கு மாவட்டமற்றும் கிளை நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிப்பதைப் பற்றியும்,
தொடர்ந்து அந்த பகுதியில் மர்கஸ் அமைத்து குழந்தைகள் மதரசா, ஐவேளைத்தொழுகை, ஜும்ஆ தொழுகை மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்யும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகிகள்
மற்றும் பெரிய கடை வீதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் NEWS TAMIL NADU வீடியோ செய்தி
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பாசிஸ சக்திகள் கூட்டு சேர்ந்தார் அதிமுகவை தோற்கடிக்க செய்வோம் திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேட்டி
வீடியோ காண: https://www.youtube.com/watch?v=QGEEv_Y0vbc&feature=youtu.be
வீடியோ காண: https://www.youtube.com/watch?v=QGEEv_Y0vbc&feature=youtu.be
கண்டன ஆர்ப்பாட்டம் PUBLIC செய்தி
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
வீடியோ காண : https://link.publicapp.co.in/aZxJo
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா (CAB) வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் _ தினமணி பத்திரிக்கை செய்தி
குடியுரிமை சட்டத் திருத்தம்: தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
தினமணி பத்திரிக்கை செய்தி
LINK:
https://m.dailyhunt.in/news/india/tamil/dinamani-epaper-dinamani/kudiyurimai+sattath+tirutham+tamizhnadu+tavhith+jamaath+amaippina+aaappattam-newsid-154090416?ss=wsp&s=a
தினமணி பத்திரிக்கை செய்தி
LINK:
https://m.dailyhunt.in/news/india/tamil/dinamani-epaper-dinamani/kudiyurimai+sattath+tirutham+tamizhnadu+tavhith+jamaath+amaippina+aaappattam-newsid-154090416?ss=wsp&s=a
Wednesday, December 18, 2019
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா (CAB) வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 18122019
மத ரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா (CAB) வைக் கண்டித்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 18/12/2019 புதன்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சகோதர சகோதரிகள் தமது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு அநியாயத்திற்கு எதிராக ஆர்பரித்தனர்.
அநியாயத்தை கண்டித்து ஆக்ரோசமாக கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
சகோதரர். M.S. சுலைமான் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
அநியாயமாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், சட்டம் நிறைவேற காரணமான BJP, ADMK வை மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்றும் முழங்கினார்கள்.
அநீதிக்கு எதிரான இந்த ஆர்ப்பட்டத்திற்கு வந்த அனைவருக்கும் மாவட்ட நிர்வாகிகள் நன்றி தெரிவித்து இனி நீதிக்காக நாம் உயிரையும் கொடுப்போம் எனும் சூளுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, December 17, 2019
ஆத்துப்பாளையம் கிளை நிர்வாக சந்திப்பு 17122019
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 17.12.19 அன்று, மாவட்ட மர்கஸில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் ஆத்துப்பாளையம் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
அவசர ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 16.12.19 திங்கள் இஷா தொழுகைக்குப் பின் பெரிய தோட்டம் மர்கஸில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் திருப்பூர் நகரக் கிளைகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இன்ஷாஅல்லாஹ் 18/12/2019 அன்று நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக எப்படியெல்லாம் பணிகளை அமைப்பது என்று ஆலோசனை செய்து வீரியமாக செயல்படும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதில் மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத், மாவட்ட துணைச்செயலாளர் சகோதரர். ஹனீபா, பெரியதோட்டம், கோம்பைத்தோட்டம், செரங்காடு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
Monday, December 16, 2019
RP நகர் கிளை பொதுக்குழு 15/12/2019
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை பொதுக்குழு மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் 15/12/2019 அன்று மங்கலம் கிளை மர்கஸில் நடைபெற்றது.
அதில் கிளையின் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது
தலைவர்: அக்பர் 9750281436
செயலாளர்: கைசர் 8072765915
பொருளாளர்: ரியாஜ் அகமது 9487984481
துணைத்தலைவர் : சம்சுதீன் 8144625211
துணைச்செயலாளர் : ரபீக் 9629423632
மாணவரணி : பாட்சா 8220870286
மருத்துவணி : மன்சூர் 7868833535 அவர்களும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாணவரணி : பாட்சா 8220870286
மருத்துவணி : மன்சூர் 7868833535 அவர்களும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து தாவா மற்றும் நிர்வாக பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில்
மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீத், மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ஷேக்பரீத் ஆகியோரின் பல்வேறு ஆலோசனைகளுடன் பொதுக்குழு நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
மங்கலம் கிளை பொதுக்குழு 15/12/2019
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை பொதுக்குழு மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் 15/12/2019 அன்று மங்கலம் கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளை பொருளாளர் அப்பாஸ் அவர்கள் வரவு செலவு அறிக்கையையும், கிளைசெயலாளர் நஜீர் அவர்கள் செயல்பாட்டு அறிக்கையை தாக்கல் செய்தனர்.
நிர்வாகத்தில் காலியாக இருந்த துணைத்தலைவர் பொறுப்பிற்கு சகோதரர். JB பாபு 9087878792 அவர்களையும்,
துணைச்செயலாளர் பொறுப்பிற்கு சகோதரர்.சதக்கத்துல்லாஹ் 9976221512, 9943815125 அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து தாவா மற்றும் நிர்வாக பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீத், மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ஷேக்பரீத் ஆகியோரின் பல்வேறு ஆலோசனைகளுடன் பொதுக்குழு நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

































