Pages

Wednesday, January 29, 2020

CAA,NRC,NPR க்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் - மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக அதன் நிர்வாகிகள் பொதுமக்களை திரட்டிச் சென்று,  26/01/2020 அன்று நடைபெற்ற மங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில்.

இதில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் இந்திய மக்களை குடியுரிமை அற்றவர்களாக மாற்ற மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA,NRC,NPR மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழகஅரசு தமிழகத்தில் நடைமுறை படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றவும்  கிராமசபை தீர்மானம் நிறைவேற்ற மனு வழங்கினார்கள்.


மேலும் CAA மற்றும்  NRC,NPR போன்ற சட்டங்களால் இந்தியாவில்  ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும், மக்களும் பாதிக்கப்படுவார்கள்  என்று கிராம சபை தலைவரிடமும் அங்கிருந்த மக்களிடமும் எடுத்துரைக்கப்பட்டது.









கிராம சபைக் கூட்டத்தில், 
 கருப்பு சட்டங்களான CAA,NRC,NPR மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழகஅரசு தமிழகத்தில் நடைமுறை படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றவும்  ஏக மனதாக கிராமசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment