Pages

Wednesday, January 29, 2020

கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை _ VKP



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VKP கிளை நிர்வாகிகள்  26/01/2020 அன்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பொதுமக்களின் சார்பில் மனு வழங்கினார்கள்.

செம்மாண்டம்பாளையம் ஊராட்சிக்கான கிராம சபை கூட்டம் 26-1-2020 அன்று செம்மாண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.



இதில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் இந்திய மக்களை குடியுரிமை அற்றவர்களாக மாற்ற மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA,NRC,NPR ஐ திரும்ப பெற வேண்டும் என வடுகன்காளிபாளையம் ஊர் பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது 




NRC,NPR போன்ற சட்டங்களால் இந்தியாவில்  ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும்,மக்களும் பாதிக்கப்படுவார்கள்  என்று கிராம சபை தலைவரிடமும் அங்கிருந்த மக்களிடமும் எடுத்துரைக்கப்பட்டது.



தீர்மானம் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்கள்.



அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment