தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 21/02/2020 வெள்ளிகிழமை அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.
முதலாவதாக கேரளா மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.
CAA, NRC, NPR கருப்பு சட்டங்களை எதிர்த்து இன்ஷாஅல்லாஹ் நடத்தவுள்ள கேரளா மண்டல மாநாடு பற்றி கருத்துகளையும், ஒத்துழைப்பையும் வழங்க கேட்டுக் கொண்டனர். இன்ஷாஅல்லாஹ் ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட பொருளாளர் மாவட்ட நிர்வாக வரவு செலவு விபரங்களை தெரிவித்து,
மாவட்ட தலைமையின் மேற்பார்வையில் இயங்கும் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்லூரிக்கு தேவையான பொருள்கள் மற்றும் பொருளாதார தேவைகளை ஈடு செய்ய மாத நன்கொடையாளர்களை திரட்டுவது என்றும்,
குடியுரிமை திருத்த சட்டம், CAA, NRC, NPR பற்றிய விளக்கத்துடன் இந்த சட்டத்தால் இந்தியர் அனைவரும் பாதிக்கப்படுவார்கள் எனும் விளக்க பிரசுரம் 10000 தயார் செய்து பிறமத மக்களுக்கும் விநியோகம் செய்வது என்றும்,
CAA,
NRC, NPR கருப்பு சட்டங்களை நடைமுறை படுத்தக் கூடாது எனும் கோரிக்கையை முன்னிறுத்தி மாநில தலைமை அறிவித்த தர்ணா உட்பட
போராட்டங்களை எப்படி நடத்துவது என்பதற்க்கான மாநில செயற்குழு இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி
25
மதுரையில் நடக்கவுள்ளதில் அணைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள முடிவு
செய்யப்பட்டது.
தர்ணா போராட்டங்களை
அணைத்து நகரப்பகுதியிலும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.



No comments:
Post a Comment