தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06-12-2020 அன்று கிளையில் நடைபெற்று வரும் மக்தப் மதரஸாவிற்கான நவம்பர் மாத பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட துணைச் செயலாளர் சகோ.ரபீக் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் முதலாவதாக சகோ. அப்துல் ரஹ்மான் (MISC) அவர்கள் "மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
கடந்த நவம்பர் மாதம் முழுவதும் இருநேர மதரஸா வகுப்பிற்கு விடுமுறை எடுக்காமல் தொடர்ச்சியாக மதரஸாவிற்கு வருகை தந்த 9 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
மேலும் தொழுகை ஒழுக்கம் என அனைத்து செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற 2 மாணவ மாணவிகளுக்கும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
குர்ஆனின் 30ம் பாகம் முழுவதும் மனனம் செய்த A.சுஹைப் என்ற மாணவரின் ஆர்வத்தை மென்மேலும் அதிகப்படுத்தும் நோக்கில் 6-12-2020 அன்று கிளையில் நடைபெற்ற பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சகோ.ரபீக் அவர்கள் ஊக்கப் பரிசு வழங்கினார்
அதைதொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசுகளாக பேனா வழங்கப்பட்டது.
வரக்கூடிய நாட்களில் அனைத்து மாணவ மாணவிகளும் விடுமுறை எடுக்காமல் மதரஸாவிற்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து மதரஸா சம்பந்தமான குறைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றோர்களிடம் கேட்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்





No comments:
Post a Comment