Pages

Tuesday, December 22, 2020

பொது ஆலோசனைக் கூட்டம் - மங்கலம்

              தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  21/12/2020 அன்று இஷா விற்கு பின்   மங்கலம் கிளை மர்கஸில்  மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின்   ஒருங்கிணைந்த  பொது ஆலோசனைக் கூட்டம்  



              மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில்  மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத்  ஆகியோர் முன்னிலையில்    நடைபெற்றது.



இதில் மங்கலம், வடுகன்காளிபாளையம், இந்தியன் நகர், சின்னவர் தோட்டம், R.Pநகர் ஆகிய கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


மங்கலம் கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ் 25/12/2020 அன்று நடத்தவுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தின்  அவசியம் பற்றியும், 

மங்கலம் பகுதி கிளைகளின் பங்களிப்பு பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட கிளை சகோதரர்கள் ஆர்ப்பாட்டம்  பெரும் வெற்றி அடையும் வகையில்,  உத்வேகமாக ஆர்ப்பாட்ட பணிகளை செய்து, 

மங்கலம் பகுதியில் சமூக நல்லிணக்கம் உருவாகும் வகையில் பணிகளை அமைத்து, பொதுமக்களின் நன்மதிப்பை பெரும் வகையில் நீதிக்கு போராட மக்களை திரட்ட  உறுதி வழங்கினார்கள். 


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment