Pages

Saturday, January 18, 2020

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 17/01/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 17/01/2020 அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.


இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் மற்றும்


இன்ஷாஅல்லாஹ் 22/01/2020 அன்று   மாவட்ட நிர்வாகம் சார்பில்  துவங்கவுள்ள பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் பற்றிய பணிகள் ஆலோசனை செய்யப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் 24/01/2020 அன்று மங்கலத்தில் நடக்கவுள்ள குடியுரிமை திருத்த சட்ட பாதிப்பு விளக்க பொதுக்கூட்டம் பற்றியும், 
இன்ஷாஅல்லாஹ்  25/01/2020 மாவட்டம் சார்பில் நடத்தவுள்ள, கலெக்டர் அலுவலகம் நோக்கிய பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

கணக்கம்பாளையம் கிளை நிர்வாக சந்திப்பு 17012020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக,17/01/2020 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில், மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் கணக்கம்பாளையம் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.


கிளை நிர்வாகத்தின் பல்வேறு கோரிக்கைகள் பற்றி பரிசீலிக்கப்பட்டது.
நிர்வாக ரீதியான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, January 16, 2020

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் - திருப்பூர் மாவட்ட பெண்கள் கல்லூரி துவக்கம்



بسم الله الرحمن الرحيم
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, திருப்பூர் கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் (மாவட்ட மர்கஸ்) ல் ஆலிமா பயிற்சி வகுப்பு
*அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம்*
இன்ஷாஅல்லாஹ் 22/01/2020 அன்று முதல் துவங்கப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் முதலாவதாக மூன்று மாத (தீனியாத்) பயிற்சி வகுப்புடன் தினசரி கல்லூரி ஆரம்பம் செய்யப்படவுள்ளது.
திருக்குர்ஆன் சரளமாக ஓதத்தெரிந்த, ஓதத் தெரியாத, எட்டாம் வகுப்பு படித்த, திருமணமான, திருமணமாகாத அனைத்து மகளிர்களும் இந்த வகுப்பில் சேர்ந்து பயிலலாம்.
தினசரி காலை 9:30 முதல் மாலை 4:00 வரையும், பிரதி வாரம் ஞாயிறு அன்று விடுமுறையுடன் வகுப்புகள் நடைபெறும்.
இந்த வகுப்பில் சேர்ந்து படிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற உடனடியாக மாவட்ட மர்கஸ் அலுவலகத்தில் சகோ.இம்ரான் (மாவட்ட மாணவரணி செயலாளர் 6369634750) அவர்களிடம் பெயர்பதிவு செய்து கொள்ளவும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஜாகிர் அப்பாஸ்,
மாவட்ட செயலாளர்,
திருப்பூர் மாவட்டம்.
9171114161, 9150030398



Wednesday, January 15, 2020

அவசர மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 13/01/2020








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 13/01/2020  அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட மர்கஸில் *அவசர மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்* நடைபெற்றது.








குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் தொடர் போராட்டத்தின் ஒன்றாக,
மாநில நிர்வாகம் அறிவித்த *ஜனவரி 25
மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி* யை சிறந்த முறையில் நடத்த

கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் கிளை சகோதரர்கள் கலந்து கொண்ட*அவசர மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்,



மாவட்ட துணைத்தலைவர் யாஸர்அராபத் அவர்கள் தலைமையில்,



மாநில செயலாளர். நெல்லை பைசல் அவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி ஏன்? எதற்கு? என்பதை சிறப்பாக எடுத்துரைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.





இன்ஷாஅல்லாஹ் நாம் நடத்தவுள்ள பேரணிக்கு உரிமையை மீட்டெடுக்க பெருவாரியான மக்களை அழைத்து வந்து கலந்து கொள்வோம் என்ற உறுதியோடு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
இடம் : உடுமலை - திருப்பூர் மாவட்டம் - 10-01-2020
உரை : ஜமால் உஸ்மானி

Sunday, January 12, 2020

உடுமலை, சாதிக் நகர் ஆகிய இரு கிளை சந்திப்பு 11/01/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக,11.01.2020 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் உடுமலை, சாதிக் நகர் ஆகிய இரு கிளை சந்திப்பு உடுமலை கிளை மர்கஸில், கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைச்செயலாளர் அப்துர்ரஷீத் அவர்கள் தலைமையில், நடைபெற்றது.




இதில் கிளை சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் மக்கள் திரள் பேரணி பற்றியும், கிளையில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் பற்றியும் குறை நிறைகள் கேட்டறியப்பட்டு, ஆலோசனைகள் வழங்கி,

இனி செய்ய வேண்டிய தாவா பணிகள், நிர்வாகப் பணிகளைப் சிறப்பாக செய்வதற்க்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கிளை நிர்வாகிகள், ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி வருங்கால பணிகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.