Pages

Saturday, July 25, 2020

நிர்வாகக்குழு கூட்டம் _25/07/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு  கூட்டம் 25/07/2020 வெள்ளிக்கிழமை   மாலை 6:00  மணி  முதல் மாவட்ட அலுவலகத்தில்  மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ்   தலைமையில்  

மாவட்ட பொருளாளர் அப்துல்ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், துணைச்செயலாளர்கள் சேக் பரீத், அப்துர்ரஷீத், ரபீக், சித்திக், மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர்  இம்ரான்  மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.




 இந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட பணிகள் பற்றியும்  இனி செய்யவேண்டிய பணிகள் பற்றியும் விரிவாக தகவல் பரிமாறப்பட்டது.

குமரன் காலனி கிளை சீரமைப்பு செய்யவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப மாவட்ட அலுவலகம் வந்த கிளை சகோதரர்களை கொண்டு குமரன் காலனி கிளை புதிய நிர்வாககுழு நியமனம் செய்யப்பட்டது. 

கிளை சார்பில் சமூக சேவைப்பணிகள் , தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த நிர்வாக ஆலோசனைகள்  வழங்கப்பட்டது 

தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால் அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில், இந்த வருடம் ஹஜ் பெருநாள் தொழுகை, கூட்டு குர்பானி ஆகியவற்றை நிறைவேற்ற கிளைகளுக்கு சுற்றறிக்கை மற்றும் கிளை பொறுப்பாளர்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்க முடிவு செய்யப்பட்டது.


கிளை சந்திப்புகள் மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்ததால் தொடர்ந்து இந்த வாரத்தில் 1.யாசின் பாபு நகர், 2.MS நகர், 3. SVகாலனி 4. பல்லடம் ஆகிய கிளைகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சந்திக்கவும்,

நமது கொள்கை சகோதரர். எஸ் வி காலனி நசீர் பாய் மரணமடைந்து விட்டதால் அவரது குடும்பத்திற்கு உதவிகள் கேட்டு கிளை சார்பில் வந்த கோரிக்கையை மாநிலத்திற்கு அனுப்பி, உதவிகள் வழங்க பரிந்துரை செய்யவேண்டும் என்றும்,

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான கர்பிணிகள் உட்பட, நோயாளிகளுக்கு இரத்தம் தேவை உள்ளதாக ஜமாஅத் சார்பில் இரத்த தானம் வழங்க வேண்டும் என்ற மருத்துவமனையின்  கோரிக்கை அடுத்து உடனடியாக மாவட்ட மருத்துவ அணி சார்பில் இரத்த தான முகாம் நடத்தவும்  முடிவுகள் எடுக்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்


குமரன் காலனி கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர்  ஜாகீர் அப்பாஸ் தலைமையில்

 மாவட்ட பொருளாளர் அப்துல்ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், துணைச்செயலாளர்கள் சேக் பரீத், அப்துர்ரஷீத், ரபீக், சித்திக், மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர்  இம்ரான்  மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி அவர்கள் முன்னிலையில் 

24/07/2020 அன்று மாவட்ட அலுவலக வளாகத்தில்  நடைபெற்றது.




குமரன் காலனி கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்தும் நோக்கில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு, கிளையின் விபரங்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் நினைவூட்டி, 


கலந்துகொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட *புதிய நிர்வாகம்* நியமிக்கப்பட்டது. 

தலைவர் : பாருக்  9445511766
பொருளாளர் : காஜா 9092461886
செயலாளர்கள் :
1. நசீர்   9944826099
2. அப்துல் லத்தீப்  9994506253
3.நாசர் 9976771186

இனி *தாவாப் பணிகள் மற்றும்  சமுதாய சேவைப்பணி* களை எப்படி எல்லாம் செய்யலாம் எனும் பல்வேறு  ஆலோசனைகள்   மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

இனி வருங்காலத்தில் தாவா பணிகளை வீரியமாக செய்வது எனும் தீர்மானத்துடன் கிளைப் பொதுக்குழு நிறைவுபெற்றது.

#அல்ஹம்துலில்லாஹ்  

Friday, July 24, 2020

நபிவழி ஜும்ஆ சின்னவர் தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம்  சின்னவர் தோட்டம்    கிளையின்    சார்பாக 24/07/2020 அன்று நபிவழியில்  ஜும்ஆ தொழுகை    ஆரம்பம்   செய்யப்பட்டது

சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 
 பள்ளி துவங்கியதின் நோக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 அல்ஹம்துலில்லாஹ்