தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 25/07/2020 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி முதல் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில்
மாவட்ட
பொருளாளர்
அப்துல்ரஹ்மான், மாவட்ட
துணைத்தலைவர்
யாசர்
அரபாத், துணைச்செயலாளர்கள் சேக் பரீத், அப்துர்ரஷீத், ரபீக், சித்திக், மாவட்ட
மருத்துவஅணி
செயலாளர்
அப்பாஸ், மாவட்ட
மாணவரணி
செயலாளர் இம்ரான் மற்றும்
மாவட்ட
தொண்டரணி
செயலாளர்
ஜெய்லானி
அவர்கள்
முன்னிலையில் நடைபெற்றது.
குமரன் காலனி கிளை சீரமைப்பு செய்யவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப மாவட்ட அலுவலகம் வந்த கிளை சகோதரர்களை கொண்டு குமரன் காலனி கிளை புதிய நிர்வாககுழு நியமனம் செய்யப்பட்டது.
கிளை சார்பில் சமூக சேவைப்பணிகள் , தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது
தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால் அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில், இந்த வருடம் ஹஜ் பெருநாள் தொழுகை, கூட்டு குர்பானி ஆகியவற்றை நிறைவேற்ற கிளைகளுக்கு சுற்றறிக்கை மற்றும் கிளை பொறுப்பாளர்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்க முடிவு செய்யப்பட்டது.
கிளை சந்திப்புகள் மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்ததால் தொடர்ந்து இந்த வாரத்தில் 1.யாசின் பாபு நகர், 2.MS நகர், 3. SVகாலனி 4. பல்லடம் ஆகிய கிளைகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சந்திக்கவும்,
நமது கொள்கை சகோதரர். எஸ் வி காலனி நசீர் பாய் மரணமடைந்து விட்டதால் அவரது குடும்பத்திற்கு உதவிகள் கேட்டு கிளை சார்பில் வந்த கோரிக்கையை மாநிலத்திற்கு அனுப்பி, உதவிகள் வழங்க பரிந்துரை செய்யவேண்டும் என்றும்,
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான கர்பிணிகள் உட்பட, நோயாளிகளுக்கு இரத்தம் தேவை உள்ளதாக ஜமாஅத் சார்பில் இரத்த தானம் வழங்க வேண்டும் என்ற மருத்துவமனையின் கோரிக்கை அடுத்து உடனடியாக மாவட்ட மருத்துவ அணி சார்பில் இரத்த தான முகாம் நடத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்



