தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 07/08/2020 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி முதல் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில்
மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் , மாவட்ட பொருளாளர் அப்துல்ரஹ்மான், மாவட்ட துணைத் தலைவர் யாசர் அரபாத், துணைச் செயலாளர்கள் சேக் பரீத், அப்துர்ரஷீத், ரபீக், சித்திக்,
மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் இம்ரான் மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் ஜாகிர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
இந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட பணிகள் பற்றியும் இனி செய்யவேண்டிய பணிகள் பற்றியும் விரிவாக தகவல் பரிமாறப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள கிளைகள் சார்பில் சமூக சேவைப்பணிகள் , தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த கிளை பொறுப்பாளர்களுக்கு நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நோயாளிகளுக்கு அவசியம் தேவையான இரத்தம் பற்றாக்குறை குறை நிலவுவதை கருத்தில் கொண்டு, இந்த மாதம் முழுவதும் ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம்கள் நடத்த மாநில நிர்வாக அறிவுருத்தலை தொடர்ந்து
நமது மாவட்டத்தில் குறைந்தது 20 இரத்த தான முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
உடனடியாக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கிளைகளை சந்தித்து அணைத்து கிளைகளும் இரத்த தான முகாம் நடத்த ஆலோசனை வழங்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்




