Pages

Saturday, August 08, 2020

நிர்வாகக்குழு கூட்டம் _07/08/2020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு  கூட்டம் 07/08/2020 வெள்ளிக்கிழமை   மாலை 5:00  மணி  முதல்   மாவட்ட   அலுவலகத்தில்    மாவட்ட தலைவர் நூர்தீன்   தலைமையில்  

மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் , மாவட்ட  பொருளாளர்   அப்துல்ரஹ்மான்  மாவட்ட  துணைத் தலைவர்  யாசர் அரபாத்,   துணைச் செயலாளர்கள்   சேக் பரீத்,   அப்துர்ரஷீத்ரபீக்சித்திக்

மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ்மாவட்ட மாணவரணி செயலாளர்  இம்ரான்  மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் ஜாகிர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது

 

 இந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட பணிகள் பற்றியும்  இனி செய்யவேண்டிய பணிகள்  பற்றியும்   விரிவாக   தகவல்   பரிமாறப்பட்டது.


மாவட்டத்தில் உள்ள கிளைகள் சார்பில் சமூக சேவைப்பணிகள் , தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த கிளை பொறுப்பாளர்களுக்கு நிர்வாக ஆலோசனைகள்  வழங்கப்பட்டது 

 

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நோயாளிகளுக்கு அவசியம் தேவையான இரத்தம் பற்றாக்குறை குறை நிலவுவதை கருத்தில் கொண்டு,  இந்த மாதம் முழுவதும் ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம்கள் நடத்த மாநில நிர்வாக அறிவுருத்தலை தொடர்ந்து

 

நமது மாவட்டத்தில் குறைந்தது 20 இரத்த தான முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

 

உடனடியாக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கிளைகளை சந்தித்து அணைத்து கிளைகளும் இரத்த தான முகாம் நடத்த ஆலோசனை வழங்கவும்  முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

 

அல்ஹம்துலில்லாஹ்

 

சின்னவர்தோட்டம் கிளை சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக, 11/08/2020 அன்று  சின்னவர்தோட்டம் கிளை சந்திப்பு, சின்னவர்தோட்டம் கிளை  மர்கஸில் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத்   அவர்கள்   தலைமையில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு நடைபெற்றது.

 

 கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்  பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நோயாளிகளுக்கு  அவசியம் தேவையான இரத்தம் பற்றாக்குறை குறை நிலவுவதை கருத்தில்  கொண்டு,  இந்த மாதம் முழுவதும் ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம்கள் நடத்த மாநில நிர்வாக அறிவுருத்தலை விளக்கி கிளை சார்பில் இரத்த தான முகாம்நடத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

 

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை  பரிமாறி உடனடியாக  நன்மையான  செயல்பாடுகளில்  ஒத்துழைக்க   வாக்களித்தனர்.

 

அல்ஹம்துலில்லாஹ்.

 

Thursday, August 06, 2020

உடுமலை, சாதிக் நகர், ஆண்டியகவுண்டனூர் கிளைகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக, 05/08/2020 அன்று  உடுமலை, சாதிக் நகர், ஆண்டியகவுண்டனூர்  கிளைகள் சந்திப்பு, உடுமலை கிளை  மர்கஸில்

 மாவட்ட துணை செயலாளர் அப்துர்ரஷீத் அவர்கள்   தலைமையில் மாவட்ட பொருளாளர்அப்துர்ரஹ்மான்   மற்றும்  கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு நடைபெற்றது.




கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்  பற்றியும் இனி செய்ய  வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

 தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நோயாளிகளுக்கு  அவசியம் தேவையான இரத்தம் பற்றாக்குறை  நிலவுவதை கருத்தில்  கொண்டு,  இந்த மாதம் முழுவதும் ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம்கள் நடத்த  மாநில நிர்வாக அறிவுருத்தலை விளக்கி கிளை சார்பில் இரத்த தான முகாம் நடத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

 

 

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை  பரிமாறி உடனடியாக  நன்மையான  செயல்பாடுகளில்  ஒத்துழைக்க   வாக்களித்தனர்.

 

அல்ஹம்துலில்லாஹ்.