Saturday, November 28, 2020

உடுமலை கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக உடுமலைகிளை சந்திப்பு (பொது மசூரா) 28/11/2020  அன்று உடுமலை மர்கஸில்  கிளை பொறுப்பாளர் மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. 

 


வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா, பெற்றோர் சந்திப்பு, கிளையில் தாயி பயிற்சி மற்றும் இன்ஷா  அல்லாஹ்  வருகின்ற  ஞாயிற்றுக்கிழமை  தர்பியாக்கள் நடத்துவது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

Wednesday, November 25, 2020

சின்னவர் தோட்டம் கிளை நிர்வாக சீரமைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு    25/11/2020 அன்று   மாவட்ட செயலாளர்.   ஜாகிர்   அப்பாஸ் தலைமையில்   நடைபெற்றது.

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி கிளை நிர்வாக சீரமைப்பு செய்து கூடுதலாக அணி செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.




 சீரமைப்பிற்குப் பின் கிளை நிர்வாகம் 

தலைவர் முஹம்மது தவ்ஃபீக்  9150507968 

செயலாளர் இத்ரீஸ் 8072493091

பொருளாளர் பிலால் 8654118061

துணைத்தலைவர் அப்பாஸ் 8883006316

துணைச்செயலாளர் ஆசிக் 6380094263

மாணவரணி அன்சர் 8825414025

மருத்துவ அணி ஹசன் 7339513354

தொண்டரணி உசேன் 6383229361

வர்த்தக அணி அலாவுதீன் 7373943311

அல்ஹம்துலில்லாஹ்

தொடர்ந்து இலக்கை நோக்கி இளைஞனே வா செயல்திட்டதினை செயல் படுத்தும் வகையில்  குடும்ப தர்பியா நடத்துவது என்றும், கிளைக்கு இமாம் நியமித்து  தாவா பணிகளை வீரியப்படுத்தவும் முடிவுகள் செய்யப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Sunday, November 22, 2020

#இலக்கை_நோக்கி_இளைஞனே_வா! திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்  #இலக்கை_நோக்கி_இளைஞனே_வா! தொடர் பிரச்சார 

திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

 கோம்பைத் தோட்டம் மாவட்ட மர்கஸ் வளாகத்தில்


மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் 

 22/11/2020 ஞாயிற்றுக் கிழமை அன்று  காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்றது 


மாவட்ட துணைத் தலைவர் யாசர் அராபத் அவர்கள்  கொள்கை உறவும்,சத்திய பிரச்சாரமும் எனும் தலைப்பிலும்,


மாநில துணைப் பொதுச் செயலாளர் அப்துல் கரீம் அவர்கள் இலக்கை நோக்கிஇளைஞனே வா நோக்கமும் செயல் திட்டங்களும் எனும் தலைப்பிலும்,


மாவட்டத் துணைச் செயலாளர்  அப்துல் ரஷீத் அவர்கள் கிளைகள் தோறும் தாயிகள் பயிற்சி வகுப்பின் அவசியமும், வழிகாட்டுதலும் எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

அடுத்து 

கொரானா பேரிடர் காலத்திலும் சிறப்பாக தாவா பணிகள், சமுதாய சேவைப்பணிகள் மற்றும் நிர்வாக பணிகளில் சிறப்பாக செயல்பட்ட கிளைகளுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.















தொடரந்து

மாவட்ட பொருளாளர், அப்துல் ரஹ்மான் அவர்கள் புத்தக தாவா, காலண்டர் தாவா,   இணையதள பதிவு, வங்கி கணக்கு மற்றும் வரவு செலவு தாக்கல் செய்வதன் அவசியங்களை விளக்கினார்.


மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் திருமண பதிவில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை விளக்கமாக எடுத்துரைத்தார்.


மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள்  உறுப்பினர் பதிவு விபரங்களையும், முழுநிர்வாகம் இல்லாத கிளைகளில் பொதுக்குழு நடத்தவும் விளக்கம் வழங்கினார்கள்.


மாவட்ட துணைத் தலைவர் யாசர் அராபத் அவர்கள்  மர்கஸ் இமாம்களின் அவசியமும் அவர்களை பயண்படுத்த வழிகாட்டுதல்களையும் எடுத்துரைத்தார்.


இதில்   மாவட்டத் துணைச் செயலாளர்கள்  ஷேக் பரீத், ரபீக், ஹனிபா, சித்திக், மற்றும் அணிச் செயலாளர்கள் ஜெய்லானி, ஜாகிர், அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மாவட்டத் துணைச் செயலாளர் சித்தீக் அவர்கள் நன்றியுரையுடன் செயல்வீரர்கள் கூட்டம் மதியம் 1:00 மணிக்கு நிறைவுபெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்