Friday, October 29, 2021

அவசர இரத்ததானம் _செரங்காடு கிளை_ 28102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 28/10/21-அன்று


திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் யாஸ்மின் என்ற சகோதரியின் பிரசவ சிகிச்சைக்காக அவசர இரத்த தானம் O+ வகை ரத்தம் ஒரு யூனிட் சகோ.காளிதாஸ் அவர்களால் வழங்கப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்....

மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (4) _29102021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (4)


29-10-2021 அன்று மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.




இதில் 1) சென்ற வார மசூராவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது.
2) அல்கைராத் பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கான பொருளாதார வசூல் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது

3) அல்கைராத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி அட்மிஷன் மற்றும் வகுப்புகள் ஆரம்பம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில் போஸ்டர் தயார் செய்து நகர கிளைகளுக்கு வழங்குவதெனவும்
3) அவினாசி, RP நகர், காலேஜ் ரோடு, GK கார்டன், ஆத்துபாளையம், திருநகர், சாதிக் நகர், காங்கேயம், வெங்கடேஷ்வரா நகர், தாராபுரம் ஆகிய கிளைகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தாவா பணிகளை வீரியப்படுத்த கிளை சந்திப்பு நடத்துவது மற்றும் அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
4) புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களுக்கான ஒருங்கிணைப்பு சம்பந்தமாக பேசப்பட்டது.
5) மாணவரணி பணிகள் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு முதற்கட்டமாக
கல்வி உதவி தொகை முகாம் குறித்து பணிகளை வீரியப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
6) மாணவரணி சம்பந்தமான பணிகளை வீரியபடுத்த திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பாக சந்திப்பு நடத்துவது என்றும்
7) காலண்டர் தயார் செய்யும் பணிகள் குறித்து பேசப்பட்டது.
ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம்_ அலங்கியம் கிளை_ 29102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 29/10/2021 அன்று தாராபுரம் பெரிய காளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த. சகோதரி பேபி அவர்களின் அவசர சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில்




நமது சகோதரர் ரபிக் பாய் மற்றும் சகோதரர் சுகைல் பாய் அவர்களால்
A+ ரத்தம் 2 யூனிட் , அவசர இரத்ததானம் வழங்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்

மாணவரணி_சந்திப்பு (1) _ மங்கலம் கிளை _28102021

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பாக 28/10/21 அன்று இஷாவிற்கு பின் மங்கலம் கிளை மர்கஸில் மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ பாதுசா அவர்கள் தலைமையில் கிளை மாணவரணி சந்திப்பு நடைபெற்றது.


அதில் மாவட்ட மாணவரணி செயலாளர் கல்வி வழிகாட்டுதல் பற்றியும், சமுதாய மக்களுக்கு கல்வி விழிப்புணர்வு மற்றும் உதவி தொகை பெற்று தருவது உட்பட பல ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் மறுமைக்காக தாவாக்களில் கவனம் செலுத்துவோம் என்றும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
இதில் இஸ்லாமிய மக்களின் இல்லந்தேடி "முஸ்லீம்களும் தீபாவளியும்" என்கிற தலைப்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

மாணவரணி மாவட்டகுழு _மஸ்வரா(1) _ 28102021

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட மாணவரணி பணிகளை வீரியமாக செயல்படுத்த, மாவட்ட நிர்வாக ஆலோசனைப்படி மாணவரணி மாவட்ட குழு உருவாக்கப்பட்டு



முதல் ஆலோசனைக் கூட்டம் 28/10/21 அன்று இந்தியன் நகர் கிளை மர்கஸில்
மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ், மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ பாதுஷா முன்னிலையில் நடைபெற்றது.
மாணவரணி மாவட்ட குழுவில்
1இந்தியன் நகர் ரஜ்ஜாக்,
2உடுமலை தன்வீர்
3சின்னவர் தோட்டம் இத்ரீஸ்
4 இந்தியன் நகர் இர்பான் ஆகியோர் மாவட்ட மாணவரணி செயலாளர் பாதுஷாவுடன் இணைந்து
கல்வி வழிகாட்டி, வேலை வாய்ப்பு வழிகாட்டுதல், அரசின் திட்டங்கள் உதவிகள் பெற்றுதருவது உள்ளிட்ட மாணவரணி செயல்பாடுகளை எவ்வாறெல்லாம் அமைக்க வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, October 27, 2021

அவசர ரத்ததானம் _ M. S. நகர்_25102021

 *கொரானா காலத்தில் அவசர ரத்ததானம்*




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M S நகர் கிளை சார்பாக நமது பகுதியை சார்ந்த சகோதரி பேபி ஷாலினி (19) யின் அவசர சிகிச்சைக்காக




திருப்பூர் ஆதார் மருத்துவமனையில். (25-10-21) அன்று O+ வகை இரத்தம் சகோ இதாயாதுல்லாஹ், மன்சூர், சேக்பாய் அகியோர்களால்
3யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்

RP நகர் கிளை சந்திப்பு (30) 26102021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக,  RP நகர் கிளை சந்திப்பு


மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர்
, மாவட்ட துணைத் தலைவர் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் 26.10.2021 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்இனி செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

Monday, October 25, 2021

கிளைப்பொதுக்குழு (2) _ வடுகன்காளிபாளையம் கிளை 24102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 24:10:2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில்



திருப்பூர் *மாவட்ட துணைச் செயலாளர்* சகோ.*நூர்தீன்* மற்றும் திருப்பூர் *மாவட்ட துணைச் செயலாளர்* சகோ. *பல்லடம் காஜா* ஆகியோர் முன்னிலையில் வடுகன்காளிபாளையம் *கிளைப் பொதுக்குழு* நடைபெற்றது.

இதில் முதலாவதாக..
TNTJ மாவட்ட பேச்சாளர் சகோ.*இர்பான்* அவர்கள் *தாவா பணிகளின் முக்கியத்துவம்* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
🏅அடுத்ததாக...
21:10:2020 முதல் 24:10:2021 வரையிலான *ஓராண்டு கால செயல்பாட்டு அறிக்கை* வாசிக்கப்பட்டது.



🏅அடுத்ததாக...
21:10:2020 முதல் 24:10:2021 வரையிலான *ஓராண்டு கால வரவு-செலவு அறிக்கை* வாசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...


தொடர்ந்து புதிய கிளை நிர்வாக தேர்வு நடைபெற்றது.
கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்ட
கிளையின் புதிய நிர்வாகம்
தலைவர்* - ஆசிப் - 6383 452 482.
செயலாளர்* - காதர் - 99 440 26 440.
பொருளாளர்* - அனஸ் - 99 44 40 50 56.
துணைத் தலைவர்* - பாவா - 90 25 96 20 73.
துணைச் செயலாளர்* - ஹாரிஸ் - 90 92 88 14 14.
மாணவரணி* - தானிஷ் - 90 44 38 78 50.
மருத்தவரணி* - உவைஸ் - 6383 92 97 52.
தொண்டரணி* - முஸ்தாக் - 63 79 14 13 96.

*அல்ஹம்துலில்லாஹ்...*


🏅அடுத்ததாக...
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கான *ஆலோசனை கூட்டம்* நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக கிளை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, October 24, 2021

கிளை சந்திப்பு (29) அவினாசி கிளை_ 23102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாகஅவினாசி கிளை சந்திப்பு



மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில் 23.10.2021 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்இனி செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

 

கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்  கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (3) _ 22102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (3)

22-10-2021 அன்று மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்



1) மாவட்ட நிர்வாகிகள் கிளைகளை சந்தித்ததில் கிளைகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
2) சென்ற வார மசூராவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது.
3) கிளைகளில் பொதுக்குழு நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
4) நடுநிலை சமுதாயம் வார இதழ் சம்பந்தமாக மக்களுக்கு தெரியபடுத்தும் வகையில் மாவட்ட மர்கஸில் ப்ளெக்ஸ் தயார் செய்து வைப்பது.
5) அல்கைராத் பெண்கள் கல்லூரி சம்பந்தமாக நகர பகுதியில் உள்ள கிளைகள் மக்களுக்கு அழைப்பு கொடுக்கும் வகையில் ப்ளெக்ஸ் மற்றும் நோட்டீஸ் தயார் செய்து வழங்குவது என்றும்
6) திருப்பூர் மாவட்டம் சார்பாக மக்தப் மதரஸாக்களை மேம்படுத்துவதற்காக மாவட்ட மதரஸா பொறுப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவின் பணிகள் குறித்து பேசப்பட்டு விரைவாக அவர்களை ஒருங்கிணைப்பு செய்து பணிகளை மேற்கொள்வதெனவும்
7) மருத்துவரணி சார்ந்த பணிகளை வீரியப்படுத்த மாவட்ட மருத்துவரணி தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவின் பணிகள் குறித்து பேசப்பட்டு விரைவாக அவர்களை ஒருங்கிணைப்பு செய்து பணிகளை மேற்கொள்வதெனவும்
மாவட்ட மாணவரணி பொறுப்பாளராக சகோ.பாதுஷா அவர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளதை மாநில தலைமையின் ஒப்புதல் பெற மெயில் அனுப்புவது என்றும்
9) மாணவரணி பொறுப்பாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பது அவர்களுக்கான பணிகள் குறித்து பேசப்பட்டு விரைவாக அவர்களை ஒருங்கிணைப்பு செய்து பணிகளை மேற்கொள்வதெனவும்
10) மாணவரணி பணிகளில் முதற்கட்டமாக கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்கும் முகாம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
11) மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கு மற்றும் அல்கைராத் மதரஸாவிற்கான பொருளாதார பற்றாக்குறை சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு சந்தா நன்கொடைகளை அதிகப்படுத்த முயற்சி செய்வதெனவும்
12) கிளைகளில் இமாம் நியமனம் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது
ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.