Thursday, March 11, 2021

கிளை சந்திப்பு _அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 11/03/21, அன்று மாவட்ட சந்திப்பு நடைபெற்றது.




இதில் மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் சித்தீக் கலந்துக் கொண்டு  பள்ளி இடத்திற்க்கான  வசூலை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, March 09, 2021

மதுரை மாவட்ட பேச்சாளர் சகோதரர்.செய்யது இப்ராஹிம் அவர்களை மாவட்ட நிர்வாகிகள் நலம் விசாரிப்பு

  நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்ட பேச்சாளர் சகோதரர்.செய்யது இப்ராஹிம் அவர்கள்


2/3/2021 செவ்வாய் மாலை மதுரை ஹாஜிமார் தெருவில்   அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும். சமாதிகளிடம் கையேந்தக்கூடாது என்ற 

ஓரிறைக்கொள்கை ஏகத்துவ பிரச்சாரம் செய்யும்போது 

காட்டுமிராண்டிகள் சிலர் அவர்மீது  மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தினர்.

சத்தியத்தைச் சொன்னதற்காக இறைத்தூதர்களும் இதுபோல் எதிரிகளால் தாக்கப்பட்டுள்ளார்கள்

அன்று முதல் இன்று வரை சத்தியப் பிரச்சாரத்தை மேற்கொள்பவர்கள் மீது அசத்தியவாதிகள் காட்டுமிராண்டிகள் இதுபோல் இழிசெயல்களில் ஈடுபடவே செய்கின்றனர்.

மறுமைவெற்றியை நோக்கி செல்லும் சத்தியவாதிகளுக்கு இதுபோல இன்னல்கள் ஏற்படவே செய்யும் என்பதை உணர்ந்து,  

எத்தனையோ மக்கள் ஏதோதோ  பிரச்சனைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் நிலையில் சத்தியத்தைச் சொன்னதற்காக தாக்கப்பட்டு வலியும் வேதனையும் அனுபவித்து சிகிச்சை பெறுவதும்,  

இதுபோன்ற பாக்கியத்தை சஹாபாக்கள் விரும்பி கேட்டதையும் நினைவு படுத்திப் பார்க்கும் போது சகோதரர்.செய்யது இப்ராஹிம் அவர்களுக்கு இறைவனின் அருள் என்றும் இதற்க்கான முழு கூலி மறுமையிலே பெரும் பாக்கியத்தை பெற்றுள்ளீர் என ஆறுதல் கூற 

அவரை திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் 08/03/2021 அன்று மதுரை அரசு மருத்துவமனையில்  நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தோம்.


அவர் விரைவாக நலம் பெற்று இன்னும் வீரியமாக சத்திய பிரச்சாரம் செய்ய அவருக்காக துஆ செய்தவர்களாக ஆறுதல் கூறி வந்தோம்.

 

அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட பேச்சாளர் சகோதரர்.பஷீர்அலி அவர்களை மாவட்ட நிர்வாகிகள் நலம் விசாரிப்பு

 நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பேச்சாளர் சகோதரர்.பஷீர்அலி அவர்களை



திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் 08/03/2021 அன்று தென்காசியில் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தோம்.
தற்போது நல்ல நலமுடன் உள்ளார்
அல்ஹம்துலில்லாஹ்.

அவருக்காக பிரார்த்தித்த உதவிய அனைவருக்கும் துஆ செய்வதாக அவரும் அவரது குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்.
ஜஸாக்கல்லாஹு ஹைரா..

Monday, March 08, 2021

உடுமலை கிளை தர்பியா

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரத்தின் சார்பாக 07-03-21 அன்று கிளை தர்பியா நடைபெற்றது



சகோ,முஹம்மது சலீம் misc அவர்கள் நபிகளாரை நேசிப்போம் என்ற தலைப்பில் பயிற்சியளித்தார்கள்


சகோ,யாஸர் அரஃபாத் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்!

இலவச புத்தக ஸ்டால் - சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டி _ வடுகன்காளிபாளையம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-3-2021 அன்று

அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி(ஸல்)”   பிரச்சார   செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக நபி ஸல் அவர்களுடைய உன்னத வாழ்க்கை மற்றும் போதனைகளை பிறமத மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் *இலவச புத்தக ஸ்டால் சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டி ஆகிய இரண்டு பகுதிகளில்* அமைக்கப்பட்டது.


இதில் அதிகமான பிறமத மக்கள் ஆர்வத்துடன் புத்தக ஸ்டாலுக்கு வருகை தந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை குறித்து விளக்கம் வழங்கி " *மனிதகுல முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்) " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிப்பாக* வழங்கப்பட்டது.

மேலும் பிறர்நலம் நாடுவது தான் இஸ்லாம், இஸ்லாமிய கடவுள் கொள்கை,
இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் ஆகிய தலைப்புகளிலும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மொத்தம் மனிதகுல முன்மாதிரி முஹம்மது நபி ( ஸல்) புத்தகம்* = 37 நபர்களுக்கும்
மற்ற தலைப்புகளில் 15 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

"யார் இந்த முஹம்மது நபி (ஸல்) இவரை அறிந்து கொள்வோம்" - வடுகன்காளிபாளையம் கிளை நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-3-2021 அன்று


பிறமத மக்கள் அதிகம் வசிக்கும் சோமனூர், கருமத்தம்பட்டி பகுதியில் "யார் இந்த முஹம்மது நபி (ஸல்), இவரை அறிந்து கொள்வோம் " என்ற தலைப்பில் நோட்டீஸ்

சோமனூர் காய்கறி சந்தை, கருமத்தம்பட்டி பஸ் நிலையம், அருகில் உள்ள கடைகள், ஆட்டோ ஸ்டாண்ட் என அனைத்து பகுதிகளிலும் உள்ள பிறமத சகோதரர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு _ இந்தியன் நகர் கிளை மதரசா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை* சார்பாக 07-03-2021 அன்று *பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு* நடைபெற்றது.




இதில் பிள்ளைகள் மீது பெற்றோர் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என்ற தலைப்பில் சகோ. இர்பான் அவர்கள் உரையாற்றினார்


பெண்கள் மதரஸாவின் அடுத்த கட்ட செயல்பாடுகள்* என்ற தலைப்பில் *சகோதரி. பாஜிலா* அவர்கள் உரையாற்றினார்



இதில் மதரஸா மாணவ மாணவிகளுக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது.


*அல்ஹம்துலில்லாஹ்*

Sunday, March 07, 2021

இறை இல்லத்தில் ஓர் இரவு _ செரங்காடு கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் மர்கஸில் (06/03/21)-அன்று இரவு இறை இல்லத்தில் ஓர் இரவு என்ற தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது.

நடைபெற்ற நிகழ்ச்சிகள் :



1)09:40 - 10:10 மணி வரை சகோ.சேக் ஃபரீத் அவர்கள் இஸ்லாம் கூறும் ஒழுங்குமுறை என்ற தலைப்பில் உரையாற்றினார்

2) 10:15 - 11:15 வரை கேள்வி-பதில் நிகழ்ச்சி சகோ.அபுதாஹிர் நடத்தினார்.

3) 04:20 மணிக்கு தஹஜ்ஜத் தொழுகை நடைபெற்றது.

4)) 06:30 மணிக்கு - தொழுகை என்ற தலைப்பில் சகோ.அபுதாஹிர் தர்பியா நடத்தினார்.

5) தர்பியாவிற்குப் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற குழுவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்