Saturday, January 08, 2022
பெரியதோட்டம் கிளை சந்திப்பு 08/01/2022
யாசீன் பாபு நகர் கிளை நிர்வாக சந்திப்பு 07/01/2022
படையப்பா நகர் கிளை சுற்று கிளைகள் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் 07/01/2022
மாவட்ட செயற்குழு 07/01/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட செயற்குழு 07/01/2022 அன்று மாலை 4:30மணி முதல் மாவட்ட தலைமையகத்தில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சகோதரர். அப்துல்லாஹ் MISc., அவர்கள்
இறையச்சமே நமது வெற்றிக்கு அடிப்படை எனும்
தலைப்பில் ஆரம்ப உரை நிகழ்த்தினார்.
மாவட்ட துணை செயலாளர் சகோதரர். அப்துர்ரஷீது அவர்கள்
ஆண்
பேச்சாளர்கள் சம்பந்தமாகவும், இணையதள செய்திகள் சம்பந்தமாகவும் கிளைகள் எவ்வாறு
செயல்பட்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாவட்ட துணை செயலாளர் சகோதரர். காஜா பாய் அவர்கள்
பெண்பேச்சாளர்கள்
சம்பந்தமாகவும், பெண்கள் பயான் நிகழ்ச்சிகள் சம்பந்தமாகவும் கிளைகள் எவ்வாறு
செயல்பட்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாவட்ட துணை செயலாளர் சகோதரர். நூர்தீன் அவர்கள்
காவல்துறை, அரசு துறை அதிகாரிகள் சந்திப்பின் அவசியம் பற்றியும், அதற்க்கான வழிகாட்டுதல் வழங்கினார்கள் மற்றும் நோட்டீஸ், பிளக்ஸ், DTP , போஸ்டர் , போஸ்டுகள், ஸ்டிக்கர்கள் என அனைத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தில் ஒப்புதல் பெறுவதின் அவசியம் சம்பந்தமாகவும் கிளைகள் எவ்வாறு செயல்பட்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சகோதரர். அப்துல்லாஹ் MISc., அவர்கள்
மக்தப் மதரஸா
மேம்பாடு குழு சம்பந்தமாகவும், மதரஸாக்களை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்கி, மாவட்ட நிர்வாக
ஆலோசனைகளை படிவம் வடிவில் கொடுக்கப்படும் அதை கிளைகள் செயல்படுத்தி ஒத்துழைப்பு
வழங்கவேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாவட்ட பொருளாளர் சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள்
கிளை நிர்வாகம் சார்பில் வரவு, செலவு விபரங்கள், வங்கி கணக்கு விபரங்களை எவ்வாறு பராமரிப்பது, என்றும் மாதாந்திர வரவு செலவு அறிக்கை
மாவட்டத்திற்கு அனுப்புவதன் அவசியம் பற்றியும், மாவட்டம் சார்பில் வழங்கப்படும் படிவங்களை
கிளைகள் பயன்படுத்தி ஒத்துழைப்பு
வழங்கவேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாவட்ட தலைவர் சகோதரர். சிக்கந்தர் அவர்கள்,
புதிய ஆண் , பெண் பேச்சாளர்களை உருவாக்கும் பயிற்சி வகுப்பு துவங்குவது பற்றியும், பிறமொழி பேசும் மக்களுக்கு தாவா செய்ய குழு உருவாக்குவது பற்றியும், மற்றும் நமது ஜமாஅத்தின் நடுநிலை சமுதாயம் வார இதழ் பொதுமக்களை சென்றடைய நிர்வாகிகள் எவ்வாறெல்லாம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.மக்ரிப் தொழுகைக்கு பிறகு
மாநில பொதுச் செயலாளர் சகோதரர் அப்துல் கரீம். MISc.,.அவர்கள்
சமரசமில்லா சத்திய கொள்கை எனும் தலைப்பில் சத்திய இஸ்லாமிய மார்க்க
அடிப்படை கொள்கையை, நமது ஜமாஅத் எவ்வித
சமரசம் இல்லாமல் கடைபிடிப்பதை விளக்கி, ஒவ்வொரு நிர்வாகியும், பேச்சாளர்களும் வீரியமாக சத்திய கொள்கையை பிரச்சாரம் செய்து, தமது வாழ்வில் கடைபிடித்து இவ்வுலகிலும்,
மறுமையிலும் வெற்றி பெறுவோம் என உரை நிகழ்த்தி ஆலோசனைகளை வழங்கினார்கள்
மாவட்ட துணைத்தலைவர் சகோதரர். ஜாகிர் அப்பாஸ் அவர்கள்,
திருமணம் நடத்தி வைக்க கிளை நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் வரும் போது, திருமண படிவத்தில் உள்ள
நமது ஜமாஅத்தின் வழிகாட்டுதல்களை விளக்கி பரிந்துரை செய்யவேண்டும் என்றும், குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி வருவோருக்கு
கிளை நிர்வாகிகள் உரிய முறையில் தகவல்களை
அறிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை
அனுப்பி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோதரர். அப்பாஸ் அவர்கள்
இரத்ததான சேவைகளை சிறப்பாக
செயல்படுத்த கிளைகள் இரத்ததான கொடையாளர் விபரங்களை சேகரிப்பது பற்றியும், மருத்துவ
உதவி பற்றிய கோரிக்கைகள் வந்தால் எவ்வாறு செயல்படுவது என்றும் ஆலோசனைகளை
வழங்கினார்கள்.
மாவட்ட துணைசெயலாளர் சகோதரர்.ரபீக் அவர்களின் நன்றியுரை மற்றும் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்ட 28வது ஜும்ஆ மர்கஸ்_ நபிவழி ஜும்ஆ_ வெங்கடேஸ்வரா நகர் கிளை _ 07012022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 07/01/2022 அன்று வெங்கடேஸ்வரா நகர் கிளை மர்கஸில்
(திருப்பூர் மாவட்ட 28வது ஜும்ஆ மர்கஸ்) நபிவழியில் ஜும்ஆ தொழுகை
மார்க்க
அறிஞர் சகோதரர் M.I.சுலைமான் அவர்களின் ஜும்ஆ உரையுடன் ஆரம்பம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
பிரசவத்திற்கு அவசர இரத்ததானம் _VSA நகர் கிளை _7012022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் V.S.A நகர் கிளை சார்பாக 07/01/2022 அன்று கர்ப்பிணி சகோதரியின் பிரசவ சிகிச்சைக்காக *O + * இரத்தம் இரண்டு யூனிட் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
Friday, January 07, 2022
சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு 06/01/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு 06/01/2022 அன்று லுஹருக்கு பிறகு சின்னவர் தோட்டம் கிளை மர்கஸில் மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும்
தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டது.
மேலும் கிளை சார்பில் மர்கஸ்
கட்டுமானப்பணி மற்றும் வருங்காலத்தில்
தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, January 05, 2022
மாவட்ட நிர்வாக ZOOM சந்திப்பு (3) 05012022
அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 05/01/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 05/01/2022 அன்று பஜ்ருக்கு பிறகு அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில்
மாவட்ட தலைவர் சகோதரர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் காஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து
கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
மேலும் கிளை சார்பில் மக்தப் மதரசா துவங்குவது, மர்கஸ் கடன் தீர்ப்பது, பொதுக்குழு நடத்தி நிர்வாக
சீரமைப்பு செய்வது மற்றும் வருங்காலத்தில்
தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, January 04, 2022
படையப்பா நகர் கிளைப் பொதுக்குழு 04.01.2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, படையப்பா நகர் கிளைப் பொதுக்குழு 04.01.2022 அன்று ஃபஜ்ருக்கு பின் மாவட்ட தலைவர் சிக்கந்தர்தலைமையில் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத், மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர்அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் நூர்தீன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜமாஅத்தின் நிர்வாக அமைப்புகள் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் நிர்வாக ஒழுங்குகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.
தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வுக்கு கிளை
பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
மாவட்ட நிர்வாகிகள் புதிய நிர்வாக தேர்வை
நடத்தினார்கள்
தேர்வு செய்யப்பட்ட படையப்பா நகர் கிளையின் நிர்வாகிகள்
தலைவர் : இல்யாஸ் 9789431212
செயலாளர் : முஹமது
சர்தார் 9952117368
பொருளாளர்: சம்சுதீன் - 8778648691
துணைத் தலைவர் : அப்துஸ் ஸமது 9952312152
துணை செயலாளர்: ஈஸா பாய் – 9940898861
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும்
கலந்து கொண்ட கிளை மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள்
வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Monday, January 03, 2022
தெருமுனைக் கூட்டம் _வடுகன்காளிபாளையம் கிளை_ 02/01/2020
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 02:01:2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் வடுகன்காளிபாளையம் கடைவீதி பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் முதலாவது சகோ. M.A அப்துல் ரஹ்மான் misc அவர்கள் இன்றைய இளைஞர்களின்
நிலையும்! நாளை மறுமையின் நிலையும்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இரண்டாவதாக சகோ. அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் பெற்றோர்களே உங்களைத்தான்!
என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த மார்க்க விளக்க சொற்பொழிவு தெருமுனைகூட்டம் ஏராளமான பொதுமக்களுக்கு
பயனுள்ளதாக அமைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, January 02, 2022
அறிவொளி நகர் தர்பியா _02012022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 02/01/2022 ஞாயிறு அன்று அறிவொளி நகர் பகுதியில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் ஆகியோர் தலைமையில் தர்பியா நடைபெற்றது
சகோதரர் யாசர் அரபாத்., அவர்கள் "தவ்ஹீத் கொள்கையும், அழைப்புபணியும்"
எனும் தலைப்பில் தவ்ஹீத் கொள்கை
விளக்கமும், அழைப்புப்பணி செய்யவேண்டிய அவசியம் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.
கலந்துகொண்ட சகோதர்கள் அறிவொளி
நகர் பகுதியில் இன்ஷாஅல்லாஹ் இனி வீரியமாக அழைப்புப்பணியை செயல்படுத்த ஆர்வமாக
வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
மாநகர் கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா _ பெரியதோட்டம் _02012022
சகோதரர் அப்துர்ரஹ்மான் MISc., அவர்கள் "நிர்வாக ஒழுங்குகள்" எனும் தலைப்பில்
நிர்வாகிகள் தாவா பணிகளை மேம்படுத்த ஆலோசனைகளையும், தங்களின்நிர்வாக திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
G K கார்டன் கிளைப் பொதுக்குழு 02/01/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்
மாவட்டம் சார்பாக, G K கார்டன்
கிளைப் பொதுக்குழு 02/01/2022 அன்று மாவட்ட
செயலாளர் யாசர் அரபாத் தலைமையில் மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்பாஸ் அவர்கள்
முன்னிலையில் நடைபெற்றது.
கிளை நிர்வாகிகள் கடந்த நிர்வாக வரவு செலவு செலவு விபரங்கள், செயல்பாடுகள் மக்கள்
மத்தியில் தெரிவித்தனர்.
தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வுக்கு கோரிக்கை வைத்தனர்.
மாவட்ட நிர்வாகிகள் புதிய நிர்வாக தேர்வை நடத்தினார்கள்
அதில் கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்ட கிளையின் புதிய
நிர்வாகிகள் விபரம்
தலைவர்: ஷான்ஷா 9943923331
பொருளாளர்: ஹிதாயத்அலி 8144617280
துணை தலைவர்: இனாயத் 9489820005
துணை செயலாளர் ஜாகிர்
9043493168
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் கலந்து கொண்ட கிளை
மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக
செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.