Saturday, June 20, 2020
திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 19/06/2020
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 19/06/2020 வெள்ளிகிழமை அன்று மதியம் 3:00 மணி முதல் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, June 18, 2020
Tuesday, June 16, 2020
Monday, June 15, 2020
நன்றி அறிவிப்பு - இணையவழி போராட்டம்
நன்றி அறிவிப்பு
கண்ணியத்திற்குரிய கிளை நிர்வாகிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைந்து தாயகம் அழைத்து வர மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி 15/06/2020 திங்கள் கிழமை அன்று காலை 10:30 மணி முதல் 10:45வரை இணையவழி போராட்டத்தை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அறிவித்தது.
தூரப்பிரதேசத்தில் துன்பப்படும் மக்களை மீட்க, அவர்களின் துன்பம் நீங்க நமது சக்திக்குட்பட்ட ஆரம்ப கட்ட உதவியாக அரசுகளுக்கு கோரிக்கை வைக்கும் வகையில் அமைந்த இந்த போராட்டத்தை
நமது மாவட்டத்தின் ஒவ்வொரு கிளை நிர்வாகிகளும் தமது பகுதிகளில் சிறப்பாக இந்த இணையவழி போராட்டத்தை சிறப்பாக நடத்தினீர்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
பாதிப்பிற்குள்ளான பொதுமக்களின் இன்னலை தீர்க்க உடனடியாக அறிவித்த இந்த போராட்டத்தை சிறப்பாக நடைபெற உழைத்த அணைத்து நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜஜாக்கல்லாஹு ஹைரா..
அரசுகள் அந்த பாதிப்பிற்குள்ளான மக்களை விரைந்து தாயகம் அழைத்துவர உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
உரிய நடவடிக்கை இல்லாத பட்சத்தில் மக்களுக்கு உதவும் வகையிலும் அரசை நிர்பந்திக்கும் வகையில் அடுத்த கட்ட செயல்பாடுகளை மாநில தலைமை ஆலோசித்து அறிவிக்கும்.
இந்த இணையவழி போராட்டத்தில் இணைந்து ஒத்துழைத்ததை விட வீரியமாக வரும் காலத்தில் நீதிக்காக, நியாயத்திற்காக ஒத்துழைக்க அணைத்து கிளை நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
மாவட்ட தலைவர்,
திருப்பூர் மாவட்டம்.

இணைய வழிப் போராட்டம்

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை உடனடியாக மீட்க கோரியும்,
அதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியும்
மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் இணைய வழிப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி 15/6/2019 திங்கட்கிழமைஅன்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அணைத்து கிளை பகுதிகளிலும் காலை 10.30 முதல் 10.45 வரை மாபெரும் இணையவழி போராட்டம் நடைபெற்றது.
இந்த இணைய வழிப் போராட்டத்தில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தி பங்கேற்றார்கள்.
வெளிநாடுகளுக்கு வேலை செய்வதற்காக, மருத்துவத்திற்காக, கல்விக்காக சென்ற தமிழக மக்கள் பலர் கொரோனா வைரஸ் காரணமாக விமானங்கள் நிறுத்தப்பட்டதால் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர்.
அவர்கள் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி சாலைகளில் படுத்துறங்கும் அவலம் இன்று வரை நீடித்து வருகின்றது.தமிழக மக்களை மீட்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றன.
வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள தமிழக மக்கள் தங்களை மீட்குமாறு கண்ணீர் மல்க அவலக்குரல் எழுப்பும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.அதனைத் தொடர்ந்தே வெளிநாடுகளில் தவிக்கும் மக்களை மீட்கும் பொருட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் இணையவழி போராட்டம் அறிவிக்கப்பட்டு திருப்பூரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய வழி போராட்டத்தில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி இணையவழி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தங்களது வீடுகளின் வாசல்களிலும், மொட்டை மாடிகளிலும் நின்று இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அதை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி அதன் மூலம் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தங்களின் தமிழக மக்களை மீட்க குரல் கொடுத்துள்ளார்கள்.
Sunday, June 14, 2020
Subscribe to:
Comments (Atom)