Sunday, January 03, 2021

உடுமலை கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 03/01/2021அன்று மாலை 5:00 முதல் 7:30 மணி வரை கிளை தர்பியா உடுமலை மஸ்ஜிதுத் தக்வாவில் நடைபெற்றது.



சகோதரர் லுக்மான்.MISc., அவர்கள் அமல்களும், இன்றைய இஸ்லாமியர்களும் எனும் தலைப்பில்,



அல்லாஹுவின் தூதர் வழிகாட்டிய அன்றாடம் செய்யவேண்டிய அமல்களில் உள்ள சிறப்புகளும், அதை செயல்படுத்தாமல் நம்மிடையே உள்ள அலட்சியங்களை தெளிவு படுத்தி,

அமல்களில் ஆர்வமாக ஈடுபட்டால் மறுமை வெற்றி என்பதை தெளிவாகக் சொல்லி வகுப்பு நடத்தினார்கள்.

கலந்துகொண்ட மக்களுக்கு உபயோகமாக இந்த தர்பியா அமைந்தது.




அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 01012021

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோம்பைத் தோட்டம் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்  தலைமையில் 01/01/2021 ஞாயிற்றுக் கிழமை அன்று  7 மணிக்கு துவங்கி நடைபெற்றது 



கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


 

மாவட்ட பேச்சாளர் சகோ. அபூபக்கர் சஅதி அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் துவக்கவுரை நிகழ்த்தினார்கள்.




தொடர்ந்து மாவட்ட துணைத் தலைவர் யாசர் அராபத் அவர்கள்  அல்கைராத் பெண்கள் கல்லூரியின் செயல்பாடுகளை விளக்கி, பட்டமளிப்பு விழா மாணவியர் சேர்க்கைகளுக்கு ஒத்துழைக்கவும், கிளைகளில் மகதப் மதரசாக்களை மேம்படுத்தும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

மாவட்டத் துணைச் செயலாளர்  அப்துல் ரஷீத் அவர்கள் தாயிகள் கிளை நிர்வாகிகளுக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.



மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்  இலக்கை நோக்கி இளைஞனே வா  செயல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அணைத்து கிளை நிர்வாகங்களை பாராட்டி, இனி அந்த இளைஞர்களை நல்வழியில் பயன்படுத்தும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மாநில துணைத்தலைவர் பா.அப்துர்ரஹ்மான் அவர்கள் நமது ஜமாஅத் இம்மை மறுமை வெற்றிக்கான ஏகத்துவத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் மாநில நிர்வாக தாவா பணிகளின் விபரங்களையும், அதற்க்கு ஏகத்துவவாதிகளின் ஒத்துழைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கினர்கள்.



மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்களின்  நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.