நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சங்க பரிவார பாஜகவையும்
அதற்கு போராடிய மக்களின் வீடுகளை இடித்த உபி அரசாங்கத்தையும் போராடியவர்களை சுட்டு
கொன்ற ஜார்கண்ட் அரசாங்கங்களைக் கண்டித்தும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் 16/06/2022 அன்று திருப்பூர் மாநகராட்சி எதிரில் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எழுச்சியோடு நடைபெற்ற
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் சகோ E.பாரூக் அவர்கள் கலந்து
கொண்டு கண்டன உரையாற்றினார்கள்,
அதில் ”நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமீபத்தில் பேசிய பாஜகவின் தேசிய தொடபாளர் நுபுர் ஷர்மா மற்றும் பாஜக ஊடகப்பொறுப்பாளர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கிறது. என்றும்
200 கோடிக்கும் மேலான இஸ்லாமிய மக்களால் தங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கப்படக்கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை குறித்து உண்மைக்கு மாற்றமான செய்திகளை பொது வெளியில் பேசியிருக்கின்றனர். இது கடும் கண்டனத்திற்கு உரியது. என்றும்
எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் விதமாக உபி அரசின் புல்டோசர் இடிப்புகள் உள்ளன, எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல் போராடுபவர்கள் முஸ்லீம் எனும் ஒரே காரணத்திற்காக அவர்களின் வீடுகள் இடிக்கப்படுகிறது, இடிப்போம் என்று வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் மிரட்டும் வகையில் அமைச்சர்களும் அதிகாரிகளும், அரசின் ஆலோசகர்களும் நடந்து கொள்கின்றனர் , ஜார்கண்ட் அரசோ போராடிய இரண்டு இளைஞர்களைச் சுட்டு கொன்றுள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்றும் இன அழிப்பிற்கான முன்னேற்பாடு இவை என சர்வதேச நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன என்று கூறினார்
இந்தியாவின் பொருளாதாரமும், விலைவாசியும் படு மோசமான நிலையில் இருக்கும் இச்சூழலில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்காமல் மதவெறிப்பிரச்சாரத்தை தான் இந்த ஒன்றிய அரசு முன்னெடுக்கிறது. என கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
விண்ணைப் பிளக்கும் கோஷங்களோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட
ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட துணை செயலாளர் ஹனீபா அவர்களின் நன்றியுரைக்குப்பிறகு அமைதியாக கலைந்து சென்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
பத்திரிகை செய்திகள்

.jpeg)



.jpeg)


