Saturday, February 26, 2022

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 25/02/2022



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழுக் கூட்டம் 25/02/2022 அன்று மாலை 5:00 முதல் 9:00 மணி வரை மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.

இரண்டு மருத்துவ உதவி கோரிக்கைக்காக
இன்றைய மாவட்ட மர்கஸ் ஜும்ஆ வசூல் 30,265/- செய்து (அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு 25,265/= + 5000/= ) வழங்கப்பட்டது. 

மேலும் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிகள், பணிகள் பற்றிய குறை நிறைகள் பேசி ஆலோசித்து வருங்கால செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

 இன்ஷாஅல்லாஹ் வரும் 27/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் நடைபெறவுள்ள மாவட்ட செயற்குழுவில் மாநில தலைமை சார்பாக நடத்தப்பட்ட பொருளாளர்கள் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கும் நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்பட்டது.

 மாணவரணி மாவட்ட குழு மஸ்வரா நடத்தி கிளைகளில் பொதுமக்களுக்கு தேவையான ஆவணங்கள் திருத்த முகாம் நடத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

கிளைகளின் கோரிக்கைகள் ஆலோசனைகள் கடிதங்கள் பற்றி ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
 
கிளைகளின் பொதுக்குழு கோரிக்கைகளுக்கு பொருளாதார தணிக்கை செய்து பொதுக்குழு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த கிளைப் பொருப்பாளர்கள் தொடர்ந்து கிளைகளை கண்காணித்து ஆலோசனைகள் வழங்குவது
எனவும் முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்டியகவுண்டனூர் கிளைசந்திப்பு 25/02/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு   
மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில்,  ஆண்டியகவுண்டனூர்  கிளை மர்கஸில்
25/02/2022 அன்று  ஜும்ஆ தொழுகைக்கு பின் நடைபெற்றது.


 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.


மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

Friday, February 25, 2022

படையப்பா நகர் கிளை நிர்வாக சீரமைப்பு 24.02.2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, படையப்பா நகர்  கிளைப் பொதுக்குழு 24.02.2022 அன்று  மாவட்ட  துணைத்தலைவர் ஜாஹிர்அப்பாஸ்,   தலைமையில் நடைபெற்றது.

கிளை சார்பாக தாவாபணி, சமுதாய சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த
நிர்வாக சீரமைப்பிற்கு கிளை பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து
மாவட்ட நிர்வாகம் சார்பில்  கிளை நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது.

சீரமைப்பு  செய்யப்பட்ட படையப்பா நகர் கிளையின் நிர்வாகிகள்

தலைவர் : இல்யாஸ் 9789431212

செயலாளர் : முஹமது சர்தார் 9952117368

பொருளாளர்: ஆரிப்கான். 7811887400

துணைத் தலைவர் : அப்துஸ் ஸமது 9952312152

துணை செயலாளர்:  ஈஸா பாய் – 9940898861

 
தேர்வு செய்யப்பட்ட  நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்