Tuesday, March 09, 2021

மதுரை மாவட்ட பேச்சாளர் சகோதரர்.செய்யது இப்ராஹிம் அவர்களை மாவட்ட நிர்வாகிகள் நலம் விசாரிப்பு

  நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்ட பேச்சாளர் சகோதரர்.செய்யது இப்ராஹிம் அவர்கள்


2/3/2021 செவ்வாய் மாலை மதுரை ஹாஜிமார் தெருவில்   அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும். சமாதிகளிடம் கையேந்தக்கூடாது என்ற 

ஓரிறைக்கொள்கை ஏகத்துவ பிரச்சாரம் செய்யும்போது 

காட்டுமிராண்டிகள் சிலர் அவர்மீது  மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தினர்.

சத்தியத்தைச் சொன்னதற்காக இறைத்தூதர்களும் இதுபோல் எதிரிகளால் தாக்கப்பட்டுள்ளார்கள்

அன்று முதல் இன்று வரை சத்தியப் பிரச்சாரத்தை மேற்கொள்பவர்கள் மீது அசத்தியவாதிகள் காட்டுமிராண்டிகள் இதுபோல் இழிசெயல்களில் ஈடுபடவே செய்கின்றனர்.

மறுமைவெற்றியை நோக்கி செல்லும் சத்தியவாதிகளுக்கு இதுபோல இன்னல்கள் ஏற்படவே செய்யும் என்பதை உணர்ந்து,  

எத்தனையோ மக்கள் ஏதோதோ  பிரச்சனைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் நிலையில் சத்தியத்தைச் சொன்னதற்காக தாக்கப்பட்டு வலியும் வேதனையும் அனுபவித்து சிகிச்சை பெறுவதும்,  

இதுபோன்ற பாக்கியத்தை சஹாபாக்கள் விரும்பி கேட்டதையும் நினைவு படுத்திப் பார்க்கும் போது சகோதரர்.செய்யது இப்ராஹிம் அவர்களுக்கு இறைவனின் அருள் என்றும் இதற்க்கான முழு கூலி மறுமையிலே பெரும் பாக்கியத்தை பெற்றுள்ளீர் என ஆறுதல் கூற 

அவரை திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் 08/03/2021 அன்று மதுரை அரசு மருத்துவமனையில்  நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தோம்.


அவர் விரைவாக நலம் பெற்று இன்னும் வீரியமாக சத்திய பிரச்சாரம் செய்ய அவருக்காக துஆ செய்தவர்களாக ஆறுதல் கூறி வந்தோம்.

 

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment