Pages

Monday, November 22, 2021

மக்தப் மதரஸா ஆசிரியர் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் _21112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  மதரஸாக்களின் ஆண், பெண் ஆசிரியர்கள் மற்றும் மதரஸா பொறுப்பாளர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் 




21/11/2021  ஞாயிறு மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை  மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் தலைமையில் திருப்பூர் மாவட்ட மர்கஸின் கீழ்தளத்தில் நடைபெற்றது.



         இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர். அபூபக்கர் சஆதி அவர்கள் "மக்தப் மதரஸா ஆசிரியர் கவனத்திற்கு" எனும் தலைப்பில்
மதரஸா ஆசிரியர்கள் கவனித்து செயல்படுத்த வேண்டியவைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.


மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் அவர்கள்
"மக்தப் மதரஸா மேம்பாட்டு வழிமுறைகள்" எனும் தலைப்பில் மதரஸா நிர்வாகிகள், ஆசிரியர்கள் எவ்வாறெல்லாம் செயல்பாடுகளை அமைத்து மதரஸாக்களை மேம்படுத்தலாம் என்று ஆலோசனைகள் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதரஸா ஆசிரியர் பொறுப்பாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை நிகழ்ச்சி மக்தப் ஆசிரியர் பொறுப்பாளர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment