தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மருத்துவ அணி சார்பாக 27/11/2021 அன்று மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் நூர்தீன் அவர்கள் தலைமையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை சென்று திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் (DEAN) சந்திப்பு நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மருத்துவஅணி சார்பில்
வருங்காலத்தில் செயல்படுத்தவுள்ள தொடர் இரத்ததான முகாம்கள், சமூக சேவைப்பணிகள் பற்றி திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டபோது மனம் நெகிழ்த்து பாராட்டினார்கள்.
உடனடியாக எங்களின் இந்த தன்னலமற்ற சேவைகள் பணிகள் எல்லாம்
ஒவ்வொரு இஸ்லாமியனும் செய்யவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது என்றும்,
உலக ஆதாயம், மனித பாராட்டுகளுக்கு இல்லாமல் இறைவனின் திருப்தியை
நாடி செயல்படுத்தி உள்ளோம் என்பதையும் எடுத்து சொல்லி விளக்கம் வழங்கி திருமறை
குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
சந்தோசமாக பெற்றுக்கொண்டார்.
மேலும் நமது
சேவைப்பணிகள் தொடர அரசு மருத்துவமனை சார்பில் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒத்துழைப்பு
வழங்கப்படும் என வாழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment