Pages

Saturday, November 20, 2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (6) _19112021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (6)

 19-11-2021 அன்று  மாவட்ட தலைவர் சகோ. சிக்கந்தர்  அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.




இதில் 


1) மாவட்ட நிர்வாகிகள் கிளைகளை சந்தித்ததில் கிளைகளின் கோரிக்கைகள் குறித்து  ஆலோசிக்கப்பட்டது. 


2) சென்ற வார மசூராவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது. 


3) அல்கைராத் பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கான நிறை குறைகள் பேசப்பட்டது. 


4) மாநில பொதுக்குழுக்கான தொண்டரணி ஏற்பாடு குறித்து பேசப்பட்டது. 


5) அல்கைராத் பெண்கள் கல்லூரி அட்மிஷன் சமபந்தமாக பேசப்பட்டது. 


6) மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இன்ஷா அல்லாஹ் 21-11-21 அன்று நடைபெற உள்ள  மதரஸா ஆசிரியர்கள் மற்றும் மதரஸா பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சம்பந்தமாக பேசப்பட்டு பொறுப்புகள் வழங்கப்பட்டது.


7) மருத்துவரணி சார்ந்த பணிகளை வீரியபடுத்த ஆலோசிக்கப்பட்டது :


🔮மருத்துவரணி குழு மசூரா விரைவாக நடத்துவது


🔮 நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யாத கிளைகள் விரைவாக செய்ய வலியுறுத்துவது.


🔮மருத்துவரணி பொறுப்பாளர் இல்லாத கிளைகளில் விரைவாக மருத்துவரணி அமைக்க வலியுறுத்துவது 


🔮இரத்தம் தானம் செய்ய விருப்புமுள்ளவர்களின் விபரங்கள் அடங்கிய லிஸ்ட் கிளைகள் தோறும் தயார் செய்ய கிளைகளை வலியுறுத்துவது


🔮 மாவட்ட அளவில் அனைத்து கிளைகளின் இரத்த தான லிஸ்ட்களையும் ஒருங்கிணைத்து தொகுப்பு தயார் செய்வது


🔮 உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் சம்பந்தமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுப்பது குறித்தும் பேசப்பட்டது. 

 

8) மாணவரணி சம்பந்தமாக எடுக்கப்பட்ட முடிவுகள் :


🔮மாணவரணி சம்பந்தமாக பணிகளை வீரியபடுத்த மாணவரணி இல்லாத கிளைகள் உடனடியாக மாணவரணியை அமைக்க வலியுறுத்துவது. 


🔮திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும்  மாணவரணி பணிகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பேஸ்புக் ஐடி ஆரம்பம் செய்வது.


🔮மாணவரணி குழுவினருக்கான பணிகள் குறித்து பேசப்பட்டது 



10) நவம்பர்மாத கிளை சந்திப்புகளை நடத்தாத மாவட்ட பொறுப்பாளர்கள் விரைவாக கிளை சந்திப்புகளை நடத்த வேண்டும் என்று 


 11) வஹி மட்டும் தான் மார்க்கம் என்ற தலைப்பில் பிரச்சாரத்தை கிளைகள் முன்னெடுக்க வலியுறுத்துவது


12) மக்தப் மதரஸா மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும்வகையில் மாவட்டம் சார்பாக மதரஸா மாணவ மாணவிகளின் கிராஅத் வீடியோ தயார் செய்வதற்கான முதற்கட்ட முடிந்துள்ளது விரைவாக அப்பணி ஆரம்பம் செய்யப்பட உள்ளது. 


13) மாதாந்தோறும் கிளைகளின் தாவா மற்றும் சமுதாயபணிகளுக்கான புள்ளி பட்டியல் தயார் செய்வது சம்பந்தமாக பேசப்பட்டது. 


14) காலண்டர் தயார் செய்வது சம்பந்தமாக இறுதிகட்ட பணிகள் குறித்து பேசப்பட்டது. 


15) ஆம்புலன்ஸ் சம்பந்தமாக பேசப்பட்டது. 


🔮 ஆம்புலன்ஸ் சேவை பணிகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பேஸ்புக் ஐடி ஆரம்பம் செய்து தினசரி செய்திகளிடுவது


🔮 சேவை அடிப்படையில் இயங்கும் நமது ஆம்புலன்ஸ் சம்பந்தமாக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்வதெனவும்


ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது. 


அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, November 17, 2021

மாணவரணி மாவட்ட குழு ஆலோசனை கூட்டம் _2_ 16112021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி குழு ஆலோசனைக்கூட்டம் 16/11/2021 அன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு இந்தியன் நகர் பள்ளியில் மாணவரணி பாதுஷா அவர்கள் தலைமையில் மாவட்ட துணை தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது

 


ஆலோசனையில்

மாணவரணி குழு உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் பிரிக்கபட்டது

கிளை மாணவரணி செய்த பணிகள், செய்யவிருக்கும் பணிகள் தனித்தனியாக சேகரிப்பு இத்ரீஸ்

 

வாரந்தோறும் இரண்டு போஸ்ட் கிரியேட் செய்வது ரஜாக், Irfan

 

வாட்ஸப் மற்றும் முகநூலில் போஸ்ட்கள் பரப்புவது தன்வீர், சிராஜ்

 

வாரந்தோறும் கல்வி வேலைவாய்ப்பு சம்பந்தமாக தகவல்களை நினைவூட்டல், கிளை மாணவரணியின் கேள்விகளுக்கு பதில் தயார் செய்வது, கல்வி சம்பந்தமாக போஸ்ட் கிரியேட் செய்வதற்கு தகவல் திரட்டி தருவது குழுவில் உள்ள அனைவரும்

 

பாதுஷா அவர்களின் பணிகள் :-

 

மாணவரணி சார்பாக கிரியேட் செய்யப்படும் அனைத்தையும் மாவட்ட மாநில நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறுவது

கிளை மாணவரணியின் கோரிக்கைகளை பெற்று குழுவிடம் இருந்து அதற்கான பதில்களை பெற்று கிளை மாணவரணிக்கு தெரிவிப்பது

கிளை மாணவரணிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புவது

கிளைகளின் மாணவரணியை கண்காணிப்பது

மாதந்தோறும் குழு மசூராவிற்கு ஏற்பாடு அழைப்பு கொடுப்பது

ஆகிய திட்டங்கள் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, November 16, 2021

மருத்துவரணி மாவட்ட குழு ஆலோசனை கூட்டம் _16112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மருத்துவரணி குழு ஆலோசனைக்கூட்டம் 16/11/2021 அன்று மாவட்ட மர்கஸில்  மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது

 


சமூக சேவை பணிகளை வருங்காலத்தில் சிறப்பாக செயல்படுத்த  ஆலோசித்து முடிவுகள் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, November 15, 2021

VKP கிளை சந்திப்பு 15/11/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் VKP கிளை சந்திப்பு 15/11/2021 அன்று  VKP கிளை மர்கஸில்  மாவட்ட துணைத்தலைவர் சகோதரர் ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் தலைமையில்,  மாவட்ட தலைவர் சிக்கந்தர் முன்னிலையில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியக பட்டமளிப்பு விழா _14/11/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெற்றுவரும் #அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியக பட்டமளிப்பு விழா




14/11/2021 ஞாயிறு திருப்பூர் மாவட்ட மர்கஸின் கீழ் தளத்தில் கல்லூரி முதல்வர் M.I.சுலைமான் தலைமையில் ஒரு வருட ஆலிமா மற்றும் தீனியாத் வகுப்பு மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.



அல்ஹம்துலில்லாஹ்


14-11-2021 துவக்க உரை 09.30 - 09.40 பயான்
09.40 - 09.55 அல்குர்ஆன் ஓர் அறிமுகம் சகோதரி : ஆமினா
09.55-10.10 ஹதீஸ் ஓர் அறிமுகம் சகோதரி : ஆலியா
10.10-10.30 திருக்குர்ஆன் மனனம்
சகோதரிகள் : சல்மா,ஷோஃபியா, அஸ்மா, ஜமீலா, சபீனா, அஸ்மிய்யா, ஷமீமா, ஷீரின் பர்ஹானா, ஆமினா, ஆயிஷா மர்யம், பைஜுல் ஹிதாயா
10.30-10.45 உரையாடல்
சகோதரிகள் : சுமைய்யா, ரினோஸ் ஃபாத்திமா
10.45-10.55 பெற்றோரை பேணுவோம்
சகோதரி : ஷோஃபியா
10.55-11.20 துஆ மனனம்
சகோதரிகள்: சபானா, சுமைய்யா, ஆஸிஃபா,ஜன்னத்துல் பிர்தவ்ஸ், அஸ்மா, ஹஸீனா, ஷிஃபானா, ஆஃபியா
11.20-11.30 சஹாபிய பெண்களின் வீரம்
சகோதரி: சல்மா
11.30-11.40 பெண்களை கண்ணியப்படுத்தும் இஸ்லாம்
சகோதரி: ஷீரின் ஃபர்ஹானா 11.40-11.55
ஒழிக்கப்பட வேண்டிய ஹீரோயிஸம்
சகோதரி; அஸ்மா
சகோதரி: சல்மா (அரபி கிராஅத்)
சகோதரி: சபானா (தமிழ்)
சகோதரி: ரிஃபானா
(கன்னடம்)
சகோதரி: முபீனா (தெலுங்கு)
சகோதரி: ஆலியா ( ஆங்கிலம்)
சகோதரி: ஷாகிரா (உருது)
சகோதரர் யாஸர் அரஃபாத் (மாவட்ட செயலாளர்)




12.25 - 01.00 சிறப்புரை :
சகோதரர்: அப்துந் நாஸர்
பட்டமளிப்பு & பரிசளிப்பு



நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதாக நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்

லுகர் தொழுகைக்கு பிறகு கலந்துகொண்டவர்களுக்கு மதிய உணவு விருந்து வழங்கப்பட்டது.