தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழுக் கூட்டம் 18/02/2022 அன்று மாலை 5:00 முதல் 9:00 மணி வரை மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிகள், பணிகள் பற்றிய குறை நிறைகள் பேசி ஆலோசித்து வருங்கால செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.
மாநில தலைமை சார்பாக நடத்தப்பட்ட பொருளாளர்கள் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மாவட்ட செயற்குழு நடத்தி
கிளை நிர்வாகங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனைகள் கேட்டு வந்த அறிவொளி நகர் மற்றும் பல்லடம் கிளை நிர்வாகிகளுக்கு அவர்களின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டது.
கிளைகளின் பொதுக்குழு கோரிக்கைகளுக்கு பொருளாதார தணிக்கை செய்து பொதுக்குழு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த கிளைப் பொருப்பாளர்கள் தொடர்ந்து கிளைகளை கண்காணித்து ஆலோசனைகள் வழங்குவது
எனவும் முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment