Pages

Friday, February 28, 2020

தர்ணா ஆலோசனைக் கூட்டம் - உடுமலை- 27022020

CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும்அறிவிப்பை தொடர்ந்து
திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருப்பூர் மாவட்டம் *உடுமலை நகரம்* மற்றும் சாதிக் நகர் கிளை இணைந்து 27:02:2020 அன்று உடுமலை கிளை மர்கஸில் மஃரிபுக்கு பிறகு தர்ணா- ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது.

இதில் மாவட்ட துணைச்செயலாளர் அப்துர் ரஷீத் தலைமையில், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு தர்ணா சம்மந்தமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கி முடிவுகள் எடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

தர்ணா ஆலோசனைக் கூட்டம் -RP நகர் - 28022020

CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும்அறிவிப்பை தொடர்ந்து
திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், RPநகர் கிளையில் 28/02/20, பஜருக்குப் பிறகு மசூரா நடைபெற்றது.
இதில் மார்ச் 01 தர்ணா நடத்து குறித்து மாவட்ட துணைத்தலைவர் யாஸர்அரபாத் தலைமையில்
மங்கலம், இந்தியன் நகர், சின்னவர் தோட்டம், RPநகர் ஆகிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

தர்ணா ஆலோசனைக் கூட்டம் -அனுப்பர்பாளையம் - 28022020

CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும்அறிவிப்பை தொடர்ந்து
திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 28/02/20, பஜருக்குப் பிறகு மசூரா நடைபெற்றது.
இதில் மார்ச் 01 தர்ணா நடத்து குறித்து மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் அனிபா, சித்திக் பாய் முன்னிலையில் ஆலோசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

தர்ணா ஆலோசனைக் கூட்டம் -MS நகர் 27022020

CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும் தர்ணா அறிவிப்பை தொடர்ந்து
திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதற்காக திருப்பூர் மாவட்டம் சார்பாக MS நகர் கிளை மர்கஸில் 27/02/2020 இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
MS நகர், SVகாலனி, GKகார்டன், காலேஜ் ரோடு, படையப்பா நகர், கணக்கம்பாளையம்
ஆகிய கிளைகள் இணைந்து
SV காலனி பகுதியில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட நிர்வாகிகள் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு தர்ணா பணிகளை கிளைகள் ஒருங்கிணைந்து நடத்த
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி கூட்டம் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

தர்ணா ஆலோசனைக் கூட்டம் - செரங்காடு- 27022020

CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும்அறிவிப்பை தொடர்ந்து
திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதற்காக 
திருப்பூர் மாவட்டம் சார்பாக செரங்காடு கிளை மர்கஸில் 27/02/2020 இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செரங்காடு, பெரிய தோட்டம், கோம்பைத்தோட்டம், VSA நகர், வெங்கடேஸ்வரா நகர், யாஸீன் பாபு நகர், ஹவுசிங் யூனிட், காங்கயம் ஆகிய 8 கிளைகள் இணைந்து
காங்கயம் சாலையில் DSK மருத்துவமனை எதிரில் அல்லது ராக்கியாபாளயம் பகுதியில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட நிர்வாகிகள் ஷேக்பரீத், ஹனீபா மற்றும் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டு தர்ணா பணிகளை 8 கிளைகள் ஒருங்கிணைந்து நடத்த
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி கூட்டம் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, February 27, 2020

*திருப்பூர் மாவட்ட அவசர செயல்வீரர்கள் கூட்டம்* 26022020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 26/02/2020  அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில்  மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில்  *திருப்பூர் மாவட்ட அவசர செயல்வீரர்கள் கூட்டம்* நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் தொடர் போராட்டத்தின் ஒன்றாக,

மாநில நிர்வாகம் அறிவித்த *பிப்ரவரி 29 மாநிலம் தழுவிய தர்ணா* போராட்டத்தை நடத்துவதற்க்கான

கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் கிளை சகோதரர்கள் கலந்து கொண்ட*அவசர மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர். நெல்லை பைசல் அவர்கள் *பிப்ரவரி 29 மாநிலம் தழுவிய தர்ணா*  ஏன்? எதற்கு? என்பதை 

தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம்  ஏன்

 இந்தியாவில் வாழும்  இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள் என அனைவரும் தங்கள் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்று

மத்திய அரசு  குடியுரிமை திருத்த சட்டத்திதை நிறைவேற்றி உள்ளது.நமது குடியுரிமையை நிரூபிக்க பிறப்பு சான்றிதழை காட்ட வேண்டும்.

பிறப்பு சான்றிதழ் யாரிடம் இல்லையோ அவர்கள் NRC  சட்டத்தின் மூலம் இந்தியர்கள் அல்லாதவர்கள் என்று  கருதப்படுவார்கள்.
இவ்வாறு நாம் அகதிகளாக்கப்பட்டால் தொழில் செய்ய முடியாது. நமது ஊரை விட்டும்,தெருவை  விட்டும்,நமது வீடுகளை விட்டும் நாம் வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களில் அடைக்கப்படுவோம்.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களை விட முஸ்லிமல்லாதவர்கள் தான்.

நமது குடும்ப உறுப்பினர்கள் யாரும் அகதி முகாமிற்கு  செல்வதை  தடுக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

ஒவ்வொரு வீடுகளிலும் வயது முதிர்ந்தவர்கள்  இறப்பு சான்றிதழ் இல்லாமல் இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

 இந்திய மக்களை அகதிகளாக மாற்றும்  கொடிய சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்ஷா அல்லாஹ் வரும் பிப்ரவரி 29 தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பில் நடைபெற உள்ளது.

இதில் நாம் குடும்பத்தோடு பங்கேற்று நமது உரிமையை நமது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் அகதி என்ற நிலையை அகற்றி இந்திய மக்களை காப்போம். என சிறப்பாக எடுத்துரைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இன்ஷாஅல்லாஹ் நாம் நடத்தவுள்ள *பிப்ரவரி 29 மாநிலம் தழுவிய தர்ணா* க்கு பெருவாரியான மக்களை அழைத்து பொதுமக்கள், அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்துவது என்றும்,

இந்த CAA, NRC, NPR அணைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் சட்டங்கள் என்பதை வெகுஜனங்கள் மத்தியில் பிரசுரங்கள், தனிநபர் பிரச்சாரங்கள் மூலம் கொண்டு செல்வது என்ற உறுதியோடும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நிறைவுற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

பத்திரிகை செய்தி :

தினத்தந்தி 27/02/2020