தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் திருப்பூர்
மாவட்டம் சின்னவர்
தோட்டம் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான_முகாம் 28-11-2021 அன்று காலை 10:00 மணி முதல்
மதியம் 2:00 வரை அரசு மருத்துவமனை யுடன் இணைந்து நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு 59 யூனிட் இரத்தம் தானமாக வழங்கினார்கள்
இந்த நிகழ்வில் TNTJ மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ், TNTJ மாவட்ட துணை தலைவர் யாசர் அராபத், சின்னவர்
தோட்டம் கிளை நிர்வாகிகள், பிற கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டரணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.
இரத்ததானம் செய்த பிறமத சகோதரர்களுக்கு
இஸ்லாம் குறித்த புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது மருத்துவமனையில் இருந்து
வந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் 9 நபர்களுக்கும் இஸ்லாம் குறித்த புத்தகங்கள்
அன்பளிப்பாக வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்ட ஊராட்சி தலைவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
இரத்த தானம் வழங்கியவர்களுக்கும், சிறப்பாக
ஏற்பாடுகள் செய்து மக்கள் நலப்பணி செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சின்னவர்
தோட்டம் கிளை நிர்வாகத்திற்கும், அரசு மருத்துவமனை சார்பில் சான்றிதழ்கள்
வழங்கினார்கள்.
இந்த சமுதாய சேவைப்பணியில் ஆர்வமுடன்
கலந்துகொண்ட, பணியாற்றிய, உதவியும்
ஒத்துழைப்பும் வழங்கிய அனைவருக்கும்
இறைவன் நல்லருள் செய்ய பிரார்த்தனையையும், நன்றியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சின்னவர்
தோட்டம் கிளை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்