Pages

Saturday, January 08, 2022

படையப்பா நகர் கிளை சுற்று கிளைகள் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் 07/01/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 

 படையப்பா நகர், MS நகர், SV காலனி, குமரன்காலனி, ஆகிய கிளைகளின்    ஒருங்கிணைந்த ஆலோசனைக்கூட்டம் 


 07/01/2022  அன்று  மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், 
மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் நூர்தீன், மாவட்ட துணைச் செயலாளர் அனீபா, மாவட்ட துணைச் செயலாளர் காஜா பாய் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 

அதில்  படையப்பா நகர் கிளைப்பகுதி மாநகரத்திலிருந்து மிகவும் தொலைவிலும் பிறவசதிகளில் குறைவாகவும் உள்ள தகவல்,

 படையப்பா நகர் கிளை  புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்படுள்ள தகவல்,

மற்றும் படையப்பா நகர் கிளை பகுதியில் செய்ய வேண்டிய தாவாப் பணிகள், சமுதாய சேவைப்பணிகள் பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கி,

படையப்பாநகர் கிளைக்கு சற்று அருகில் உள்ள கிளைகள், தாவா பணிகள், பொருளாதார வசூல் உதவி உட்பட அனைத்து பணிகளிலும் படையப்பா நகர் கிளைக்கு
உதவியும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment