Pages

Saturday, September 19, 2020

நிர்வாகக்குழு கூட்டம் _18/09/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு  கூட்டம்  17/09/2020 வெள்ளிக்கிழமை   மாலை 5:30  மணி  முதல்   மாவட்ட  அலுவலகத்தில்  மாவட்ட  தலைவர்  நூர்தீன்   தலைமையில்  


மாவட்ட
 செயலாளர் ஜாகிர் அப்பாஸ் , மாவட்ட  பொருளாளர்   அப்துல்ரஹ்மான்,    மாவட்ட  துணைத் தலைவர்  யாசர் அரபாத்,   துணைச் செயலாளர்கள்   சேக் பரீத்,   அப்துர்ரஷீத்,  ரபீக்,  சித்திக், ஹனிபா

மாவட்ட மருத்துவஅணி செயலாளர் ப்பாஸ்மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி, வர்த்தகரணி செயலாளர்  ஜாகிர் மற்றும்  மாவட்ட   மாணவரணி   செயலாளர்   இம்ரான்     ஆகியோர்   கலந்து கொண்டு   நடைபெற்றது.

கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட பணிகள் பற்றியும்  இனி செய்யவேண்டிய பணிகள்  பற்றியும்   விரிவாக   தகவல்   பரிமாறப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் வரும் 20/09/2020 அன்று நடைபெறவுள்ள  மாவட்ட செயற்குழு வை எப்படி நடத்துவது என்றும்,  என்னென்ன விஷயங்கள் பேசலாம் என ஆலோசனை செய்து முடிவுகள்   செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

Monday, September 14, 2020

திருப்பூர் நகரக் கிளைகள் அவசர ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் நகரக் கிளைகள் அவசர ஆலோசனைக் கூட்டம்  13.09.20 ஞாயிறு காலை 7.00.மணிக்கு மாவட்ட மர்கஸில் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் தலைமையில், மாவட்ட துணை செயலாளர்  ஹனிபா முன்னிலையில் நடைபெற்றது. 



இதில் அல்கைராத் பெண்கள் மதரஸா மாணவர் சேர்க்கை குறித்தும், இன்ஷா அல்லாஹ் நாளை நடக்கவிருக்கின்ற  அல்கைராத் பெண்கள் மதரஸா   துவக்க நிகழ்ச்சி குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

M.S.நகர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக, 13/09/2020 அன்று   M.S.நகர்   கிளை சந்திப்பு,   M.S.நகர்   கிளை   மர்கஸில்

 

மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள்   தலைமையில்,  மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ்,  மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் , மாவட்ட துணை செயலாளர் ரபீக் முன்நிலையில் கிளை  நிர்வாகிகள்  கலந்து  கொண்டு  நடைபெற்றது.

 கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்  பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

நிர்வாக ஒழுங்குகள் பற்றியும், நிர்வாகிகள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை  பரிமாறி உடனடியாக  நன்மையான  செயல்பாடுகளில்  ஒத்துழைக்க வாக்களித்தனர்.

 அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, September 13, 2020

கொரோனா பேரிடர் கால 149 வது இரத்ததான முகாம்

 









தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை

மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை இணைந்து 13/09/2020 அன்று மாபெரும் இரத்ததான முகாம் அனுப்பர்பாளையம்  காமாட்சி அம்மன் பாத்திர சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

 

 

 அரசு மருத்துவமனை குழுவினருடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளை நிர்வாகிகள் மற்றும் TNTJ தொண்டரணி சகோதரர்கள் ஆர்வமுடன் களப்பணி யாற்றினார்கள்.

 


 

 

இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு 17 யூனிட் இரத்ததை தானமாக வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.