Tuesday, April 20, 2021

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தின் தீனியாத் 3வது பட்டமளிப்பு நிகழ்ச்சி

 


அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தின் சார்பில் மூன்று மாத தீனியாத் மற்றும் ஒரு வருட ஆலிமா வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் தீனியாத் பாடப்பிரிவின் மூன்றாவது பட்டமளிப்பு நிகழ்ச்சி 


திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம், மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் தலைமை தாங்கினார்கள். 



கல்லூரி முதல்வர் மௌலவி M.I. சுலைமான் அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாணவியரின் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவுகள் நடைபெற்றது. 

இதில் ஆரம்பமாக மாணவியர்களின் கிராத் 

 தமிழ், மலையாளம், உருது, ஆங்கிலம் மற்றும் அரபி மொழியில் மாணவியர்களின் பயானும்  நடைபெற்றது. 

மேலும் ரமலான் தொடர்பான விழிப்புணர்வு கேள்வி பதில் நிகழ்ச்சியும்,

 அதைத்தொடர்ந்து மாணவியரின் துஆக்கள் மனன கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 



இதில் கல்லூரியின் ஆசிரியர் மௌலவி. அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் இஸ்லாமிய குழந்தைகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 



இந்நிகழ்ச்சியில் மூன்றாவது தீனியாத் வகுப்பை நிறைவு செய்த மாணவியர்களுக்கு சான்றிதழ்களும், 

தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள்,

 வருகைப்பதிவில் சிறந்து விளங்கியவர்கள் 

மற்றும் மார்க்க நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. 



    இறுதியாக மாவட்ட துணைத்தலைவர் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தின் பாடத்திட்டங்கள், முக்கியத்துவம் குறித்து விளக்கினார். 

இதில் திரளான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்

 அல்ஹம்துலில்லாஹ்.