தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (6)
19-11-2021 அன்று மாவட்ட தலைவர் சகோ. சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்
1) மாவட்ட நிர்வாகிகள் கிளைகளை சந்தித்ததில் கிளைகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
2) சென்ற வார மசூராவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது.
3) அல்கைராத் பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கான நிறை குறைகள் பேசப்பட்டது.
4) மாநில பொதுக்குழுக்கான தொண்டரணி ஏற்பாடு குறித்து பேசப்பட்டது.
5) அல்கைராத் பெண்கள் கல்லூரி அட்மிஷன் சமபந்தமாக பேசப்பட்டது.
6) மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இன்ஷா அல்லாஹ் 21-11-21 அன்று நடைபெற உள்ள மதரஸா ஆசிரியர்கள் மற்றும் மதரஸா பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சம்பந்தமாக பேசப்பட்டு பொறுப்புகள் வழங்கப்பட்டது.
7) மருத்துவரணி சார்ந்த பணிகளை வீரியபடுத்த ஆலோசிக்கப்பட்டது :
🔮மருத்துவரணி குழு மசூரா விரைவாக நடத்துவது
🔮 நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யாத கிளைகள் விரைவாக செய்ய வலியுறுத்துவது.
🔮மருத்துவரணி பொறுப்பாளர் இல்லாத கிளைகளில் விரைவாக மருத்துவரணி அமைக்க வலியுறுத்துவது
🔮இரத்தம் தானம் செய்ய விருப்புமுள்ளவர்களின் விபரங்கள் அடங்கிய லிஸ்ட் கிளைகள் தோறும் தயார் செய்ய கிளைகளை வலியுறுத்துவது
🔮 மாவட்ட அளவில் அனைத்து கிளைகளின் இரத்த தான லிஸ்ட்களையும் ஒருங்கிணைத்து தொகுப்பு தயார் செய்வது
🔮 உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் சம்பந்தமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுப்பது குறித்தும் பேசப்பட்டது.
8) மாணவரணி சம்பந்தமாக எடுக்கப்பட்ட முடிவுகள் :
🔮மாணவரணி சம்பந்தமாக பணிகளை வீரியபடுத்த மாணவரணி இல்லாத கிளைகள் உடனடியாக மாணவரணியை அமைக்க வலியுறுத்துவது.
🔮திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் மாணவரணி பணிகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பேஸ்புக் ஐடி ஆரம்பம் செய்வது.
🔮மாணவரணி குழுவினருக்கான பணிகள் குறித்து பேசப்பட்டது
10) நவம்பர்மாத கிளை சந்திப்புகளை நடத்தாத மாவட்ட பொறுப்பாளர்கள் விரைவாக கிளை சந்திப்புகளை நடத்த வேண்டும் என்று
11) வஹி மட்டும் தான் மார்க்கம் என்ற தலைப்பில் பிரச்சாரத்தை கிளைகள் முன்னெடுக்க வலியுறுத்துவது
12) மக்தப் மதரஸா மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும்வகையில் மாவட்டம் சார்பாக மதரஸா மாணவ மாணவிகளின் கிராஅத் வீடியோ தயார் செய்வதற்கான முதற்கட்ட முடிந்துள்ளது விரைவாக அப்பணி ஆரம்பம் செய்யப்பட உள்ளது.
13) மாதாந்தோறும் கிளைகளின் தாவா மற்றும் சமுதாயபணிகளுக்கான புள்ளி பட்டியல் தயார் செய்வது சம்பந்தமாக பேசப்பட்டது.
14) காலண்டர் தயார் செய்வது சம்பந்தமாக இறுதிகட்ட பணிகள் குறித்து பேசப்பட்டது.
15) ஆம்புலன்ஸ் சம்பந்தமாக பேசப்பட்டது.
🔮 ஆம்புலன்ஸ் சேவை பணிகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பேஸ்புக் ஐடி ஆரம்பம் செய்து தினசரி செய்திகளிடுவது
🔮 சேவை அடிப்படையில் இயங்கும் நமது ஆம்புலன்ஸ் சம்பந்தமாக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்வதெனவும்
ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.