Saturday, January 04, 2020
Wednesday, January 01, 2020
M.S.நகர் கிளை சந்திப்பு 01012020
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக, 01.01.2020 அன்று காலை, M.S.நகர் கிளை சந்திப்பு கிளை மர்கஸில், கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் அவர்கள் தலைமையில், மாவட்டதுணைத்தலைவர் யாசர் அரபாத் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணிக்கு கிளை சார்பில் செய்த பணிகள் பற்றியும், கிளையில் நிர்வாகிகளின் செயல்பாடுகள்
பற்றியும் குறை நிறைகள் கேட்டறியப்பட்டு, ஆலோசனைகள் வழங்கி,
இனி செய்ய வேண்டிய தாவா பணிகள்,
நிர்வாகப் பணிகளைப் சிறப்பாக செய்வதற்க்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கிளை நிர்வாகிகள், ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி வருங்கால பணிகளை
சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
பெரியகடைவீதி கிளை நிர்வாக சந்திப்பு 31/12/2019
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 31.12.2019 அன்று, மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் பெரியகடைவீதி கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
பெரிய கடை வீதி மர்கஸ் இட உரிமையாளர் கொடுத்த காலக்கெடு நிறைவு பெற்றதால், உரிமையாளருக்கு நன்றி சொல்லி மர்கஸில் நாம் ஏற்படுத்திய கட்டுமானங்களை திரும்ப எடுத்துக்கொள்வது என்றும்,
பெரியகடைவீதி மர்கஸ் கட்டுமானப் பொருள்களை கணக்கம்பாளையம் தற்காலிக மர்கஸ் கட்டுமானத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது, எனும் மாவட்ட நிர்வாக ஆலோசனை முடிவுகளை சொல்லி,
இனி வருங்கால செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெரிய கடை வீதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
அவசர நிர்வாககுழுக் கூட்டம் 31122019
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 31/12/2019 அன்று இரவு 7:00 மணி முதல், நிர்வாககுழுக் கூட்டம் மாவட்ட தலைவர். நூர்தீன் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
டிசம்பர் 28 அன்று சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணிக்கு திருப்பூர் மாவட்டம் சார்பில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டதையும்,
அதில் நிகழ்ந்த குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.
பெரிய கடை வீதி மர்கஸ் இட உரிமையாளர் கொடுத்த காலக்கெடு நிறைவு பெற்றதால், உரிமையாளருக்கு நன்றி சொல்லி மர்கஸில் நாம் ஏற்படுத்திய கட்டுமானங்களை திரும்ப எடுத்துக்கொள்வது என்றும்,
பெரியகடைவீதி மர்கஸ் கட்டுமானப் பொருள்களை கணக்கம்பாளையம் தற்காலிக மர்கஸ் கட்டுமானத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
கிளைகளின் பணிகள் செயல்பாடுகள் பற்றி ஆலோசனை செய்து, கிளை சந்திப்புக்களை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரியில் இன்ஷாஅல்லாஹ் ஜனவரி 5ல் நடக்கவுள்ள மாநில செயற்குழுவில் அணைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Sunday, December 29, 2019
கவர்னர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி - திருப்பூர்
இந்தியர்களை மதரீதியாக
பிரிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமை கவர்னர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி யை அறிவித்து 28/12/2019 அன்று
மிக பிரமாண்டமான இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எழுச்சியுடன் நடந்தது.
இந்த கோரிக்கை பேரணியில்
திருப்பூர் மாவட்டம் சார்பில் பெண்கள்
குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக
கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்காக கலந்து கொண்ட நமது மாவட்ட கிளை மக்கள் விபரம்
மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது.
Subscribe to:
Comments (Atom)






