தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 31.12.2019 அன்று, மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் பெரியகடைவீதி கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
பெரிய கடை வீதி மர்கஸ் இட உரிமையாளர் கொடுத்த காலக்கெடு நிறைவு பெற்றதால், உரிமையாளருக்கு நன்றி சொல்லி மர்கஸில் நாம் ஏற்படுத்திய கட்டுமானங்களை திரும்ப எடுத்துக்கொள்வது என்றும்,
பெரியகடைவீதி மர்கஸ் கட்டுமானப் பொருள்களை கணக்கம்பாளையம் தற்காலிக மர்கஸ் கட்டுமானத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது, எனும் மாவட்ட நிர்வாக ஆலோசனை முடிவுகளை சொல்லி,
இனி வருங்கால செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெரிய கடை வீதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment