Saturday, February 01, 2020

11 கிளைகளின் கூட்டு செயற்குழு கூட்டம் 31/01/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம்   31/01/2020 அன்று மாலை 7:00 மணி முதல்  மாவட்ட மர்கஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
 திருப்பூர் மாவட்ட கோம்பைத் தோட்டம், பெரியதோட்டம், பெரியகடைவீதி, வெங்கடேஸ்வரா நகர், செரங்காடு, VSA நகர், காதர்பேட்டை, குமரன் காலனி, படையப்பா நகர்,
கணக்கம்பாளையம், காங்கயம் ஆகிய முக்கிய   11 கிளைகளின் கூட்டு செயற்குழு நடைபெற்றது.


இந்த செயற்குழுவில் வருங்கால  தாவா  பணிகளை  வீரியமாக செயல்படுத்தவும்நிர்வாக ஒழுங்குகளை சீர்படுத்தவும்இம்மை மறுமை வெற்றியை பெறும் நல்ல நோக்கத்தில் 

  சகோதரர். பா.அப்துர்ரஹ்மான் (மாநில துணைத்தலைவர்)  அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள் .
கலந்து கொண்ட நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்துடன் இனி பணிகளை வீரியமாக செயல்படுத்துவோம் எனும் உறுதியுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்

Thursday, January 30, 2020

அவசர மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 29/01/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 29/01/2020 அன்று மாலை 7:00 மணி முதல்  மாவட்ட மர்கஸ் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.


இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து   முடிந்த தாவா நிகழ்ச்சிகள்,  சமுதாய சேவைப்பணிகள்கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
   திருப்பூர் மாவட்ட கோம்பைத் தோட்டம், பெரியதோட்டம்பெரியகடைவீதி,  வெங்கடேஸ்வரா நகர்,  செரங்காடு, VSA நகர், காதர்பேட்டை, குமரன் காலனி, படையப்பா நகர்,
கணக்கம்பாளையம், காங்கயம் ஆகிய முக்கிய 11 கிளைகளின் கூட்டு செயற்குழு 

இன்ஷாஅல்லாஹ்  வருகின்ற 31/01/2020 வெள்ளிக்கிழமை  அன்று மாலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை கோம்பைத் தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் (மாவட்ட மர்கஸ்) பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளதற்கு  பணிகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகள் செய்து முடிவு எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, January 29, 2020

CAA,NRC,NPR க்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் - மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக அதன் நிர்வாகிகள் பொதுமக்களை திரட்டிச் சென்று,  26/01/2020 அன்று நடைபெற்ற மங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில்.

இதில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் இந்திய மக்களை குடியுரிமை அற்றவர்களாக மாற்ற மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA,NRC,NPR மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழகஅரசு தமிழகத்தில் நடைமுறை படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றவும்  கிராமசபை தீர்மானம் நிறைவேற்ற மனு வழங்கினார்கள்.


மேலும் CAA மற்றும்  NRC,NPR போன்ற சட்டங்களால் இந்தியாவில்  ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும், மக்களும் பாதிக்கப்படுவார்கள்  என்று கிராம சபை தலைவரிடமும் அங்கிருந்த மக்களிடமும் எடுத்துரைக்கப்பட்டது.









கிராம சபைக் கூட்டத்தில், 
 கருப்பு சட்டங்களான CAA,NRC,NPR மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழகஅரசு தமிழகத்தில் நடைமுறை படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றவும்  ஏக மனதாக கிராமசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்

கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை _ VKP



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VKP கிளை நிர்வாகிகள்  26/01/2020 அன்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பொதுமக்களின் சார்பில் மனு வழங்கினார்கள்.

செம்மாண்டம்பாளையம் ஊராட்சிக்கான கிராம சபை கூட்டம் 26-1-2020 அன்று செம்மாண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.



இதில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் இந்திய மக்களை குடியுரிமை அற்றவர்களாக மாற்ற மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA,NRC,NPR ஐ திரும்ப பெற வேண்டும் என வடுகன்காளிபாளையம் ஊர் பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது 




NRC,NPR போன்ற சட்டங்களால் இந்தியாவில்  ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும்,மக்களும் பாதிக்கப்படுவார்கள்  என்று கிராம சபை தலைவரிடமும் அங்கிருந்த மக்களிடமும் எடுத்துரைக்கப்பட்டது.



தீர்மானம் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்கள்.



அல்ஹம்துலில்லாஹ்

பெரிய தோட்டம் கிளை சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 27/01/2020 அன்றுபெரிய தோட்டம் கிளை சந்திப்பு  கிளை  மர்கஸில், கிளை பொறுப்பாளர், மாவட்ட   துணைச்செயலாளர் ஷேக் பரீத் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

இதில் கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள் பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
  

 இன்ஷாஅல்லாஹ் வரும் 31/01/2020 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டத்தில் தொய்வாக உள்ள கிளைகளின் குறைகளை சீர்செய்வதற்காக மற்றும் தாவா,நிர்வாக  பணிகளை வீரியப்படுத்த நடைபெறவுள்ள மாவட்ட செயற்குழு பற்றி கிளை நிர்வாகிகள், மற்றும் கிளை சகோதரரர்களுக்கு விளக்கம் வழங்கி கலந்துகொள்ள வலியுறுத்தப்பட்டது.

  கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.


Monday, January 27, 2020

திருப்பூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி / பத்திரிக்கை செய்தி



தினகரன்



குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், 
இச்சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தியும்  25.01.2020 சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலங்களை நோக்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பேரணி நடைபெற்றது.



தி இந்து 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற  திருப்பூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி பற்றி ஊடகங்களில் வந்த செய்திகள் ...

தினகரன் 


தினத்தந்தி 


தீக்கதிர்

உள்ளாட்சி சாரல் 

வரலாறு நாளிதழ் 

Sunday, January 26, 2020

CAA சட்டத்தை கண்டித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி







குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், 




இச்சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தியும்  25.01.2020 சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலங்களை நோக்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பேரணி நடைபெற்றது .

திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி மாவட்டத் தலைவர் நூர்தீன் தலைமையிலும்   மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைத் தலைவர் யாசர் அராபத், மாவட்ட துணைச் செயலாளர்கள், அப்துர் ரஷீத், ஷேக் பரீத், ரபீக், சித்திக், ஹனிபா, மற்றும் மாவட்ட அணிச் செயலாளர்கள் இம்ரான், ஜாகிர், ஜெய்லானி, அப்பாஸ் ஆகியோர் முன்னிலையிலும்  நடைபெற்றது.



தென்னம்பாளையம் காதர் சலிமா திருமண மண்டபத்திலிருந்து  பல்லடம் மெயின் ரோடு வழியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றது.





இப்பேரணியில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் கைகளில் தேசிய கொடி ஏந்தி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷங்களை முழங்கினர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், என்.பி.ஆர், என்.ஆர்.சி. சட்டங்களுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.













மாவட்ட கலக்டர் அலுவலகம் எதிரில் அமைக்கப்பட்ட தற்காலிக மேடையில்
மாநில தலைவர் சகோ. ஷம்சுல்லுஹா ரஹ்மானி கண்டன உரை நிகழ்த்தினார்.




மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் நாட்டு மக்களை அவதிக்குள்ளாக்கும் சட்டமாகும்.



இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் சமூக அக்கறை கொண்டவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.







இந்திய விடுதலைக்குப் பிறகு நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவது தற்போது தான் என்று குறிப்பிடும் அளவுக்கு இந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வீரியமடைந்துள்ளன.




குடியுரிமை திருத்தச் சட்டத்திலிருந்து ஒரு அங்குலம் கூடப் பின்வாங்கப் போவதில்லை என்று உள்துறை அமைச்சர் அமீத்ஷா தெரிவித்துள்ளார். நாங்களும் எங்கள் போராட்டத்திலிருந்து ஒரு அங்குலம் கூடப் பின்வாங்க மாட்டோம் என்பதை உணர்த்தும் விதமாகத்தான் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது.





நாடெங்கிலும் மக்கள் சி.ஏ.ஏ. மற்றும்  என்.ஆர்.சி.யை எதிர்த்துக் கொண்டிருக்கும் வேளையில் மத்திய பாசிச அரசு எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் என்பிஆரை செயல் படுத்தத் துடிக்கின்றது.





 கோடிக்கணக்கான மக்களை அகதிகளாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக அரசு ஆதரித்தது வேதனை அளிக்கிறது.


எனவே, தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகிய சட்டங்களை தமிழகத்தில் நடைமுறைபடுத்த மாட்டோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்.

இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.


இந்தப் பேரணியில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட  ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு, கோஷங்களை எழுப்பியும், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர். சட்டங்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 25/01/2020 அன்று மாலை 2:00 மணி முதல் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் 25/01/2020 அன்று நடந்து முடிந்த கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற மாபெரும் பேரணியின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.

பல கிளைகள் உளப்பூர்வமாக பணியாற்றி பெரும் திரளான பொதுமக்களை திரட்டி வந்திருந்ததை பாராட்டும் வகையில் கிளை பொறுப்பாளர்கள் பேசவேண்டும் என்றும்,

மாவட்டம் சார்பில் நன்றி அறிவிப்பு சுற்றறிக்கை போடவும் முடிவு செய்யப்பட்டது.

தாவா பணிகளை வீரியமாக செய்ய வேண்டியுள்ள பகுதி கிளைகளை கண்டறிந்து 

அந்த கிளைகளுக்கு,  அணைத்து உறுப்பினர்களையும் கலந்துகொள்ளும் வகையில் சிறப்பு செயற்குழு வைத்து தாவா பணிகளின் நன்மைகள் மற்றும் நோக்கத்தை தெளிவுபடுத்தி, ஆர்வமூட்டி கூடுதல் நிர்வாக சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

அந்த அடிப்படையில் முதல் கட்டமாக  மாவட்ட மர்கசை சுற்றியுள்ள கிளைகளுக்கு இன்ஷாஅல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு செயற்குழு வைப்பது என்றும் முடிவுகள் செய்யப்பட்டது.

  

அல்ஹம்துலில்லாஹ்.

இரத்தக் கொடையாளர் சேகரிப்பு மற்றம் இரத்த வகை கண்டறியும் முகாம் - சின்னவர் தோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சின்னவர் தோட்டம் கிளை சார்பில் 26/01/2020 அன்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, இரத்தக் கொடையாளர் சேகரிப்பு மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்று கொண்டுள்ளது
பொதுமக்கள் ஆர்வமுடன் தமது இரத்த பிரிவை அறிந்து பொதுமக்களுக்கு உதவ உறுதி எடுத்து இரத்தகொடையாளராக பதிவு செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்