தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெறும் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தில் பயிலும் மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி 4.11.2020 புதன்கிழமை காலை 11:00 முதல் 12:30 வரை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சகோ M.I.சுலைமான் அவர்கள்
கல்லூரியின் செயல்பாடுகள் பற்றியும், மாணவிகளின் கல்வி தரம் மற்றும் பெற்றோர் நடந்து
கொள்ளவேண்டிய வழிமுறைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்களும், கல்வியக
பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்களும் கலந்து கொண்டு நிர்வாக
ரீதியான கருத்துக்களை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
இதில் ஆர்வமாக பல மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு, மாணவிகளின் கல்வி மேம்பாடுகளுக்கு ஒத்துழைக்கவும், கல்லூரி சம்பந்தமான பல்வேறு ஆலோசனை களையும் பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் பேச்சுப்பயிற்சி வகுப்பில் சிறப்பான
முறையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவியர்களுக்கு பரிசளிப்பு வழங்கி
ஊக்கப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள், கல்வியக ஆசிரியர்கள் சந்திப்பு நடத்தி குறை
நிறைகளை கேட்டறிந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.


No comments:
Post a Comment