தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோம்பைத் தோட்டம் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் 01/01/2021 ஞாயிற்றுக் கிழமை அன்று 7 மணிக்கு துவங்கி நடைபெற்றது
கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
மாவட்ட பேச்சாளர் சகோ. அபூபக்கர் சஅதி அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் துவக்கவுரை நிகழ்த்தினார்கள்.
தொடர்ந்து மாவட்ட துணைத் தலைவர் யாசர் அராபத் அவர்கள் அல்கைராத் பெண்கள் கல்லூரியின் செயல்பாடுகளை விளக்கி, பட்டமளிப்பு விழா மாணவியர் சேர்க்கைகளுக்கு ஒத்துழைக்கவும், கிளைகளில் மகதப் மதரசாக்களை மேம்படுத்தும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா செயல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அணைத்து கிளை நிர்வாகங்களை பாராட்டி, இனி அந்த இளைஞர்களை நல்வழியில் பயன்படுத்தும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாநில துணைத்தலைவர் பா.அப்துர்ரஹ்மான் அவர்கள் நமது ஜமாஅத் இம்மை மறுமை வெற்றிக்கான ஏகத்துவத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் மாநில நிர்வாக தாவா பணிகளின் விபரங்களையும், அதற்க்கு ஏகத்துவவாதிகளின் ஒத்துழைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கினர்கள்.
மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.








No comments:
Post a Comment