தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழுக் கூட்டம் 25/02/2022 அன்று மாலை 5:00 முதல் 9:00 மணி வரை மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இரண்டு மருத்துவ உதவி கோரிக்கைக்காக
இன்றைய மாவட்ட மர்கஸ் ஜும்ஆ வசூல் 30,265/- செய்து (அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு 25,265/= + 5000/= ) வழங்கப்பட்டது.
மேலும் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிகள், பணிகள் பற்றிய குறை நிறைகள் பேசி ஆலோசித்து வருங்கால செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.
இன்ஷாஅல்லாஹ் வரும் 27/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் நடைபெறவுள்ள மாவட்ட செயற்குழுவில் மாநில தலைமை சார்பாக நடத்தப்பட்ட பொருளாளர்கள் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கும் நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்பட்டது.
மாணவரணி மாவட்ட குழு மஸ்வரா நடத்தி கிளைகளில் பொதுமக்களுக்கு தேவையான ஆவணங்கள் திருத்த முகாம் நடத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
கிளைகளின் கோரிக்கைகள் ஆலோசனைகள் கடிதங்கள் பற்றி ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
கிளைகளின் பொதுக்குழு கோரிக்கைகளுக்கு பொருளாதார தணிக்கை செய்து பொதுக்குழு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த கிளைப் பொருப்பாளர்கள் தொடர்ந்து கிளைகளை கண்காணித்து ஆலோசனைகள் வழங்குவது
எனவும் முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment